பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/18

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

மரங்களிலும் பாறைகளிலும் அடிபட்டுக் கொண்டே சென்றது. குள்ளநரி எவ்வளவு சொன்னாலும் புலி கேட்பதாக இல்லை. அது தாவித்தாவிச் சென்றது. புலி அந்தக் காட்டை விட்டு வெகு தூரம் ஓடிய பிறகுதான் சற்று இளைப்பாற நின்று பார்த்தது. இதற்குள் தலையிலும் உடம்பிலும் அடிபட்டுக் குள்ளநரி இறந்து போயிற்று.

கிழட்டுக் குதிரையும் கடக்கிட்டி முடக்கிட்டியும் தந்திரத்தால் உயிர் தப்பின. என்றாலும், குதிரைக்குக் காட்டுப்பக்கத்தில் வாழவே பிடிக்கவில்லை.

“எங்கள் பட்டணமே நல்லது. அங்கு புலியெல்லாம் கிடையாது. அங்கே வசிப்பதைப் போல வேறு எங்கும் சுகமாக வசிக்க முடியாது. நான் அங்கேயே போகிறேன்” என்று சொல்லிவிட்டு வந்த வழியிலேயே நடக்கத் தொடங்கிற்று. கடக்கிட்டி முடக்கிட்டி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அது கேட்க வில்லை. “காட்டில் மின்சார விளக்கே இல்லை. எல்லாம் ஒரே இருட்டு, கார் சத்தத்தைக்கூடக் கேட்க முடியவில்லை. இங்கு என்னால் ஒரு நொடியும் வாழ முடியாது” என்று சொல்லி விட்டுக் குதிரை புறப்பட்டுவிட்டது.