பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/21

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

17

அதனால் குதிரை வந்துபோனபத்து நாள்களுக்குப் பிறகு ஒரு நாள் கடக்கிட்டி முடக்கிட்டி தனது ஆசையை நிறைவேற்றிக்கொள்ளத் தீர்மானித்தது. வழக்கம்போலக் கிழவன் அன்றும் விறகை விற்றுவிட்டுச் சத்திரத்தில் வந்து படுத்துத் தூங்கலானான்.

அந்தச் சமயம் பார்த்துக் கடக்கிட்டி முடக்கிட்டி கிழவன் போட்ட பச்சைப் புல்லை வேகமாகத் தின்றுவிட்டுப் பட்டணம் பார்க்கப் புறப்பட்டது. கிழவன் பழைய சோறு தனக்குப் போடும் நேரத்திற்குள் சத்திரத்திற்கு வந்து விட வேண்டும் என்று அது ஓட்டமும் நடையுமாகப் பல வீதிகளில் சென்றது.

ஒரு வீதியிலே அந்த கிழக்கு திரை சுவரில் ஒட்டியிருந்த சுவரொட்டிக் காகிதத்தை வாயினாலேயே கடித்துக் கிழித்து எடுத்துத் தின்றுகொண்டிருப்பதைக் கடக்கிட்டி முடக்கிட்டி பார்த்து, மிகுந்த மகிழ்ச்சியோடு அதன் அருகே சென்றது.

“அண்ணே, சுகமா வந்து சேர்ந்தியா?” என்று அது குதிரையைப் பார்த்துக் கேட்டது.

“வா, தம்பி. எப்படியோ மெல்ல மெல்லப் பட்டணமே வந்து சேர்ந்துவிட்டேன். காட்டிலே அந்தப் புலியைப் பார்த்தபோது என் உடம்பு அப்படியே நடுங்கிப் போயிற்று. நல்ல வேளை, நீ காப்பாற்றினாய். ஆனால், மறுபடியும் புலி வந்து விடுமோ என்ற பயத்