பக்கம்:கடக்கிட்டி முடக்கிட்டி.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

ஆனால், விறகுச் சுமையைத் தலையில் வைத்துக் கிழவனால் சுமந்து செல்ல முடியுமா ? அதற்காக அவன் ஒரு கழுதையை வளர்த்து வந்தான். அந்தக் கழுதையின் மேல் விறகுக் கட்டை வைத்துப் பட்டணத்திற்கு ஓட்டிச் செல்லுவான். விறகு விற்று வரும் பணத்தைக் கொண்டு சமையலுக்கு வேண்டிய அரிசி பருப்பு முதலியவற்றை வாங்கி வருவான். இப்படி அவன் வாழ்நாள் கழிந்து கொண்டிருந்தது.

இளம் வயதிலிருந்தே அந்தக் கழுதை விறகைச் சுமந்து சென்றதால் அதன் பின் கால்கள் இரண்டும் கொஞ்சம் கொஞ்சமாக உன் பக்கம் வளைந்து விட்டன. அதனால் அந்தக் கழுதை நடக்கும்போது பின்கால்கள் ஒன்றோ டொன்று இடித்துக் கொள்ளும். அப்படி இடித் துக்கொள்ளும்போது “கடக்கிட்டி முடக்கிட்டி, கடக்கிட்டி முடக்கிட்டி” என்று சத்தம் கேட்கும். கழுதை விரைவாக ஓடும்போது இந்தச் சத்தம் மேலும் அதிகமாகக் கேட்கும். அதனால் அந்தக் கழுதைக்குக் கிழவன் ‘கடக்கிட்டி முடக்கிட்டி’ என்றே செல்லமாகப் பெயர் வைத்துவிட்டான்.

பட்டணத்திலிருந்து மாலை நேரத்தில் திரும்பிய பிறகு கிழவன் சமையல் செய்யத் தொடங்குவான். அதற்காக அரிசியையும் பருப்பையும் தண்ணீரில் தனித்தனியாகப் போட்டு அரித்து உலையில் இடுவான். அப்படிச் செய்வதால் கிடைக்கும் கழுநீரைத் தன் கழுதைக்கு வைப்பான். கழுதையும் ஆவலோடு