பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

யில் இறக்கிவிட்டான், அவர்கள், மீன் பிடிப்பதிலும், சிப்பிகள் பொறுக்குவதிலும் காலம் கழித்தார்கள்.

எரின் விரிகுடாவில் கப்பல்கள் செல்லும்போதே தென் அமெரிக்கக் கண்டம் கொலம்பஸ் பார்வையில் தட்டுப்பட்டது. ஆனால். அது ஒரு வெறு நிலம் என்று அவன் அறிந்துகொள்ளவில்லை. மற்றத் தீவுகளைப்போல் அதுவும் ஒன்று என்று எண்ணிக் கொண்டான்.

டிரினிடாடுப் பகுதியில், தான் சீனர்களைப் பார்க்கக் கூடும் என்று எதிர்பார்த்தான். கொலம்பஸ். அப்படியில்லாவிட்டால் நீக்ரோ மன்னர்களையாவது சந்திக்கக் கூடும் என்று எண்ணினான். ஆனால், கப்பல்களுக்குச் சிறிது தூரத்தில் ஒரு படகு தோன்றியது. அதில் இருந்தவர்கள் எல்லோரும் கரீபியர்களைப் போன்ற சிவப்பு இந்தியர்களாகவேயிருந்தனர். ஆனால், அவர்களைக் காட்டிலும் சிறிது நல்ல பழக்க வழக்கமுடையவர்களாகத் தோன்றினார்கள். அவர்கள் கருத்தைக் கவர்வதற்காக, கப்பல் மேல் தட்டில் பித்தளைக் குடங்களைக் கொண்டுவந்து வைக்கச் சொன்னான் கொலம்பஸ். ஆனால் அவர்கள் அதை விசேஷப் பொருள்களாக எண்ணிக் கப்பலை நோக்கி வரவில்லை. அதன் பின், மாலுமிகள் சிலரைக் கப்பல் மேல் தட்டில் ஏறி நடனம் ஆடி நிற்கும்படி சொன்னான். அவர்கள் ஆட்டத்திற்கேற்றபடி குழல் ஊதப்பட்டது. இந்தக் காட்சியைக் கண்ட இந்தியர்கள், இது ஏதோ போரழைப்பு என்று எண்ணிக் கொண்டு. கப்பலை நோக்கி மழைபோல் அம்புகளைப் பொழிந்தார்கள். நல்ல வேளையாக ஒரு அம்புகூடக் கப்பலை எட்டவில்லை. அதன் பின் அவர்கள் தங்கள் வழியில் சென்று மறைந்து விட்டார்கள்.

அந்த வளைகுடாப் பகுதி முழுவதையும் ஆராய்வது என்ற திட்டத்துடன் ஆகஸ்டு மாதம் 4-ம் நாள் கப்பல்கள்