பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/116

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


10

தெய்வம் காத்தது


பரியா மாநிலத்தைக் கண்டு பிடித்த பிறகு, இஸ்பானியோலாவை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, பரியா ஒரு சொர்க்கமாகவும், இஸ்பானியோலா ஒரு நரகமாகவும்தான் தோன்றியது கொலம்பசுக்கு. உண்மையிலேயே இஸ்பானியோலா அவனை வாட்டி வதைக்கும் நரகமாக மாறி விட்டது.

பிரான்சிஸ்கோ ரோல்டான் என்பவனை கொலம்பஸ் இஸ்பானியோலாவின் தலைமை நீதிபதியாக நியமித்திருந்தான், அந்தத் தலைமை நீதிபதி கொலம்பசை எதிர்க்கும் புரட்சிக்காரனாக மாறி விட்டான். நீதிபதி ரோல்டான், ஸ்பானியர்களிடையே இன வெறியைத் தூண்டி விட்டுத் தனக்கு ஆள் சேர்த்துக் கொண்டான், ஸ்பானியர்களாகிய நாம் ஒரு ஜினோவாக்காரனுக்கா ஆட்பட்டிருப்பது என்று கேட்டுக் கிளர்ச்சி மூட்டினான். ரோல்டான் இஸ்பானியோலாவில் சில பகுதிகளைத் தன் வசப்படுத்திக் கொண்டான். தன் ஆட்சிக்குக் கீழ்ப்பட்ட ஸ்பானியர்களுக்கு, அவன் ஏராளமான தங்கமும். அதிக அடிமைகளும், வைத்துக் கொள்ள உரிமையளித்தான். ஸ்பெயினிலிருந்து