பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

எதிர்த்துப் போராட முடியாமல் கொலம்பஸ் சகோதரர்கள் ரோல்டானைச் சமாதானப்படுத்த முயன்றனர்.

சமாதானப் பேச்சு ஏறக்குறைய ஓராண்டுகாலம் நடைபெற்றது. தடவைக்குத் தடவை ரோல்டான் எதிர்ப்பைக் கைவிடுவதற்குரிய தன் கேள்விகளை அதிகப்படுத்தினான், கடைசியாக ரோல்டான்மீது உள்ள குற்றச்சாட்டுகளெல்லாம் சரியானவையல்ல என்று அறிவித்து, அவனை மீண்டும் தலைமை நீதிபதி பதவியில் அமர்த்தினான் கொலம்பஸ். ரோல்டானின் ஆட்களில் ஸ்பெயின் திரும்ப விரும்பியவர்கள் எல்லோருக்கும், கட்டணமில்லாமல் கப்பலில் செல்லும் வாய்ப்பும், அவர்கள் வரியில்லாமல் தங்கம் எடுத்துச் செல்லவும் அனுமதியும் அளித்தான் கொலம்பஸ். ஸ்பெயின் செல்லாதவர்கள், சாரகுலாவில் நிலங்கள் பெற்றுக் கொள்ளலாமென்று அறிவித்தான.

ரோல்டானுக்காக கொலம்பஸ் வழங்கிய இந்தச் சலுகையின் மூலம், ஸ்பானியர்கள், விளை நிலங்களில் ஒவ்வொரு பகுதியைத் தங்கள் உடைமையாகப் பெற்றனர். அந்தந்த நிலப்பகுதிகளில் வாழும் சிவப்பு இந்தியர்கள் அனைவரும் அவ்வந்நிலத்தின் உடைமைக்காரனுக்கு அடிமையானான். அந்தந்த நிலங்களில் கிடைக்கும் தங்கம் முழுவதும் அவனவனுக்கே உரிமை. அவன் அரசுக்கும் பெருங்கடல் தளபதிக்கும் வரிகூடக் கொடுக்க வேண்டிய இல்லை. கொலம்பஸ் ஸ்பானியர்களுக்கு அளித்த இந்தச் சலுகையினால் ஸ்பெயினுக்கும் ஸ்பெயின் அரசுக்கும் அப்படி ஒன்றும் அதிகமான நஷ்டம் இல்லை என்பது உண்மைதான்! ஆனால், அந்த நிலங்களின் பரம்பரை உரிமைக்காரர்களான சிவப்பு இந்தியர்களுக்கு இது ஒரு பேரிடியாகவே விழுந்தது. மேலும் அவர்கள் ஸ்பானியர்களுக்கு என்றென்றும் அடிமையாயிருக்க வேண்டிய கொடுமைக்கும் ஆளாயினர். ஆயுத பலமில்லாத அந்தக்