பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

கண்டுபிடிக்க வேண்டும் என்பதேயாகும். இன்னும் அவன் கியூபாவைச் சீனாவின் ஒரு பகுதியென்றே நினைத்துக் கொண்டிருந்தான். இந்தக் கடற் கால்வாய் வழியாகத்தான் மார்க்கோபோலோ சீனாவிலிருந்து இந்திய மாக்கடலுக்குச் சென்றான் என்று கருதினான் கொலம்பஸ். இந்தியாவில் எங்கேனும் அவன் வாஸ்கோடகாமாவைச் சந்திக்கக்கூடும் என்று கருதிய அரசரும் அரசியாரும், அவனுக்கு ஓர் அறிமுகக் கடிதம் எழுதிக் கொடுத்திருந்தனர்.

நீரோட்டங்களின் வேகத்தை எதிர்த்துக் காற்றின் உதவியால் செல்லக்கூடிய புதுமுறைக் கப்பல்கள் சிலவற்றைக் கட்ட வேண்டுமென்று கொலம்பஸ் எண்ணியிருந்தான். ஆனால் அதற்கெல்லாம் நேரமுமில்லை அந்த ஆராய்ச்சிகளில் செலவழிக்க அவனிடமோ அரசியிடமோ பணமுமில்லை. கிடைத்த பாய்மரக் கப்பல்களை வைத்துக் கொண்டு பயணம் தொடங்கினான். இந்தக் கப்பல்களைச் செலுத்திச் சென்ற மாலுமிகளும் கப்பல் தலைவர்களும் திறமை மிக்கவர்கள். இந்தக் கப்பல் பிரயாணிகளிலேயே குறிப்பிடத்தக்கது ஓர் ஐரிஷ் வேட்டை நாய்தான்! இதை இந்தியர்களை எதிர்த்து நிற்கும் சமயத்தில் அவர்களை விரட்டிக் கடிக்க விடுவதற்காக கொலம்பஸ் கொண்டு வந்தான்.

இந்தப் பயணத்தில் கப்பலில் வேலைக்கு வந்த மாலுமிகளில் பெரும்பாலோர் இளைஞர்கள். வயதான மாலுமிகளைக் காட்டிலும் இளைஞர்களை அழைத்துச் சென்றதால், வேலைகள் சுறுசுறுப்பாக நடந்தன. கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்கள். தங்கள் கப்பல் தலைவர்களை மதித்து பணிவுடன் நடந்து கொண்டார்கள். முன் பயணங்களில் வந்த மாலுமிகள், வேலையும் ஒழுங்காகச் செய்ததில்லை. பற்றாக்குறைக்கு, "இவர் என்ன பெரிய ஊரைக்