பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127

தாது தான் முன் ஏற்பாடு செய்திருந்தபடியே தன்னுடன் வந்த கப்பல்களை ஸ்பெயினுக்குத் திருப்பியனுப்பினான்.

அந்தக் கப்பல்கள் மோனா வழியைச் சுற்றிக்கொண்டு இஸ்பானியோலாவின் தென் கரைப்புறமாகச் சென்ற போது புயலடிக்கத் தொடங்கிவிட்டது. தென்கரைப் புறத்தில் ஒரு துறைமுகங்கூடக் கிடையாது. சுழற்காற்றோ வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் சீறி வந்தது.. ஓவாண்டோவின் அகங்கார மமதைக்கு அந்தக் கப்பல்கள் எல்லாம் பலியாயின. பத்தொன்பது கப்பல்கள், ஏறியிருந்த ஆட்கள், தங்கம், மற்ற பொருள்களோடு அப்படியே மூழ்கிவிட்டன. ஆறு கப்பல்கள் மூழ்கினாலும், அவற்றில் இருந்த சிலர் எப்படியோ தப்பிப் பிழைத்துக் கரையேறி விட்டார்கள். நான்கு கப்பல்கள், சுழலுக்குத் தப்பிப் பத்திரமாக சாண்டா டோமிங்கோ வந்து சேர்ந்து விட்டன என்றாலும், சேர்ந்த உடனேயே துறைமுகத்திலேயே மூழ்கிப் போயின! அப்படிப்பட்ட நிலையில்தான் உயிருக்குப் போராடிக்கொண்டு, அந்தக் கப்பல்களை மாலுமிகள் காப்பாற்றிக்கொண்டு வர முடிந்தது, தப்பிப் பிழைத்து எவ்வித சேதமுமில்லாமல் திரும்பிவந்து, ஸ்பெயினுக்கும் போய்ச் சேர்ந்தது, அந்தக் கப்பலில்தான் கொலம்பசின் வரித் தங்கத்தை வசூலித்துக்கொண்டு அவனுடைய பிரதிநிதியான கார்லாஜல் புறப்பட்டிருந்தான், கார்லாஜலும், கொலம்பசின் தங்கமும், அந்தச் சிறு கப்பலின் மாலுமிகளும் பத்திரமாக ஸ்பெயின் போய்ச் சேர்ந்தனர்.

கொலம்பசை எத்தனையோ சோதனைகளுக்காட்படுத்திய கடவுள், அந்த நேரத்தில், நியாயத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அவனுடைய தங்கமும் அவனுடைய பிரதிநிதியும் ஏறியிருந்த கப்பலைக் காப்பாற்றி