பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

11

புதியமொழிகளும் கற்றுக்கொண்டான். உலக அறிவை வளர்க்கும் உயர்தரமான புத்தகங்களையெல்லாம் வாங்கிப் படித்தான்.

தம்பி பார்த்தலோமியோ, நிலப்படம், தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் வேலைக்கமர்ந்திருந்தான். தன்னை நாடி வந்த அண்ணன் கிரிஸ்டாபரையும் அதே நிறுவனத்தில் வேலைக்குச் சேர்த்துவிட்டான். கொலம்பஸ் அங்கு போய்ச் சேர்ந்த சில நாட்களில் அண்ணனும் தம்பியும் சேர்ந்து சொந்தமாகவே நிலப்படம் தயாரிக்கும் தொழிலை மேற் கொண்டுவிட்டார்கள்.

நிலப்படம் தயாரிப்பதற்கு வேண்டிய சரியான கருவிகள் அந்தக் காலத்தில் கிடையாது. ஆகவே அவை முழுவதும் சரியாக அமைந்திருப்பதும் இல்லை. பெரும் பாலும் கப்பல் தலைவர்கள் கூறுகின்ற தகவல்களைக் கொண்டே அவை தயாரிக்கப்படும். கடல் வழியாக உலகின் வெவ்வேறு பகுதிகளுக்குச் சென்றுவந்த கப்பல் தலைவர்கள் கூறுகின்ற செய்திகளை ஆதாரமாகக் கொண்டு, நிலப்படங்கள் வரையப்படும். இந்தச் செய்திகளைச் சேர்ப்பதற்காக அவர்கள் கப்பல் தலைவர்களுடன் நெருங்கிப் பழகுவார்கள். கப்பல் தலைவர்களுக்கு விருந்து வைத்துப் பேச்சுக் கொடுத்துச் செய்திகளை யறிந்து கொள்ளுவார்கள். அந்தச் செய்திகளை யடிப்படையாகக் கொண்டு நிலப்படங்களைத் தயாரிப்பார்கள். இவற்றைப் புதிதாகப் பயணம் மேற்கொள்ளும் மாலுமிகளும், புதிய புதிய வழிகளில் தங்கள் கப்பல்களைச் செலுத்த முற்படும் கப்பல் தலைவர்களும் விலைகொடுத்து வாங்குவார்கள் கொலம்பஸ் சகோதரர்களின் பிழைப்பு இவ்வாறு நடந்து வந்தது.

லிஸ்பனுக்கு வந்த அதே ஆண்டில் கிரிஸ்டாபர் கொலம்பஸ் ஒரு போர்ச்சுக்கீசியக் கப்பலில் வேலைக்குச்