பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/138

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

அங்கிருந்து எப்படித் தாய்நாட்டுக்குத் திரும்புவது என்பது பெரிய பிரச்சினையாகி விட்டது. கப்பல்கள் அந்தப் பக்கம் வருமென்று எதிர்பார்ப்பதற்கும் வழியில்லை.

யாராவது ஒருவர் துணிந்து இஸ்பானியோலா நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அங்கிருந்து ஓர் உதவிக் கப்பலைக் கொண்டுவந்தால் நல்லது என்று எல்லோரும் கருதினார்கள். ஆனால், யார் போவது?

டீகோ மெண்டஸ் உதவியைத்தான் எல்லோரும் நாடினார்கள்.

டீகோ மெண்டஸ் இந்தியர்களிடமிருந்து ஒரு பெரிய ஓடத்தை விலைக்கு வாங்கினான். அதற்குப் பாய்மரமும் பாய்களும் அமைத்தான். ஒரு சிறு கப்பல் போல் அதை மாற்றியமைத்தான். இஸ்பானியோலா நோக்கிப் புறப்பட்டான். ஆனால், வழியில் வடமுனையில் ஓரிடத்தில் வாழ்ந்த இந்தியர்கள் அவனைப் பிடித்துக் கொண்டார்கள். அவன் எப்படியோ தப்பிப் பிழைத்து சாண்டா குளோரியாவுக்கே திரும்பி வந்து சேர்ந்தான்.

மறுபடியும் அவன் புறப்பட்ட போது ஜினோவாக்காரனான பீக்கி என்ற மற்றொரு கப்பல் தலைவன் இன்னொரு ஓடத்தில் அவனுக்குத் துணையாகப் புறப்பட்டான். ஓடத் துக்கு ஒரு தலைவனும், ஆறு வெள்ளையர்களும் பத்து இந்தியர்களுமாகப் பதினேமும் பதினேழும் முப்பத்து நான்கு பேர் புறப்பட்டுச் சென்றார்கள். இந்தியர்கள் பாதி வழியிலேயே இருந்த தண்ணீரையெல்லாம் குடித்துத் தீர்த்து விட்டார்கள். தண்ணீர் தவிப்பெடுத்தே ஓர் இந்தியன் இறந்து போனான். மற்றவர்கள் துடுப்பு வலிக்கக்கூட வலுவில்லாமல் சோர்ந்து கிடந்தார்கள். நமாசா என்ற இடத்தில் எல்லோரும் கரைக்குச் சென்று, வயிறு கொண்ட மட்டும் நல்ல தண்ணீரைப் பருகி. மீன் கறி சமைச்-