பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/142

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

141

"எப்படியாவது சந்திரனை விட்டால் போதும்" என்று இந்தியர்கள் அவனை வேண்டினார்கள். அதன்பின் சந்திர கிரகணம் விலகியது. கொலம்பசின் உணவுப் பஞ்சமும் ஒழிந்தது.

மார்ச் மாதக் கடைசியில் மெண்டஸ் புறப்பட்டுச் சென்ற எட்டாவது மாதம் ஒரு கப்பல் சாண்டா குளோரியா அருகில் வந்தது. அதை இஸ்பானியோலா கவர்னர் ஓவாண்டோ தான் அனுப்பியிருந்தான். கொலம்பசும், அவன் ஆட்களும் இன்னுமா உயிருடன் இருக்கிறார்கள் என்று பார்த்து வரும்படி அந்தப் படுபாதகன் அக்கப்பலை அனுப்பியிருந்தான். ஓர் ஆளைக் கூட ஏற்றிக்கொண்டு வரக் கூடாதென்று அந்தக் கப்பல் தலைவனுக்கு அவன் கடுமையான உத்தரவிட்டிருந்தானாம். ஆனால், இரண்டு பீப்பாய் திராட்சை மதுவும் சிறிது உப்பிட்ட பன்றிக்கறியும் அவன் வெகுமதியாக அனுப்பியிருந்தான். அத்தோடு அந்தக் கப்பல் தலைவன் ஒரு நல்ல செய்தி கொண்டுவந்திருந்தான். உதவிக் கப்பல் கொண்டுவர மெண்டஸ் முயற்சி செய்து கொண்டிருக்கிறான் என்பதே அந்நற்செய்தி.

கப்பல் சென்றபின் போராஸ் சகோதரர் கூட்டத்துக்கும் கொலம்பஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே ஒரு சிறு சண்டை ஏற்பட்டது. இருக்கும் ஆயுதங்களைக் கைப்பற்றுவதற்காகவே அவர்கள் சண்டையிட்டார்கள்: கடைசியில் கொலம்பஸ் பக்கத்தாருக்கே வெற்றி கிட்டியது. போராஸ் சகோதரர்கள் இருவரைத் தவிர மற்ற அனைவரும் மன்னிப்புப் பெற்றார்கள். அவர்கள் இருவரும் பாதுகாவலில் வைக்கப்பட்டார்கள்.

ஜமைக்காவில் குடியேறி ஓராண்டு கழிந்தபின் மெண்டஸ் அனுப்பிய ஒரு சிறு ஓட்டைக் கப்பல், உயிர் பிழைத்திருந்த சுமார் நூறு பேரையும் ஏற்றிக்கொண்டு