பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

பசுக்கு அரசியைக்காணும்: அனுமதி வழங்கப்படக் கூடாதென்று அவர் கட்டளையிட்டிருந்தார்.

மெடினா டெல்காம்போ என்ற நகரில் இருந்த போது ஸ்பெயின் நாட்டின் பேரரசி இசபெல்லா 1504 - ம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ம் நாளன்று உலகவாழ்வை நீத்தாள். அவள் இறந்து போனதை எண்ணிப் பெருந்துயர் உற்றவன் கொலம்பஸ் ஒருவனே! இந்தப் பரந்த உலகில் அவனுக்கு ஆதரவளித்த ஒரே இதயம் அரசி இசபெல்லாவினுடையதுதான் மன்னாதி மன்னர்கள் இந்த மாநிலத்தில் பலர் இருந்தாலும், அவனுடைய மதிப்பை உள்ளபடியே கணித்தறிந்தவள் அவள் ஒருத்தியேதான் பின்னும் பின்னும், அவன் மீது பழியும் குற்றமும் பலர். சாட்டிய போதும், அவனுக்கு அனுசரணையாக நின்று அவனுடைய துயரத்தைத் துடைத்த அன்னை போல் இருந்தவள் அவள் ஒருத்தியேதான்! அரசர் பெர்டினான்ட் கூட் கொலம்பசை ஒரு தலைவலியாகவே கருதினார். ஆனால், அரசியாரின் மனத்தை வருத்தக் கூடாதென்றே அவர் கொலம்பசுக்கு ஆதரவு தருவதில் பங்கு கொண்டார். அரசி இசபெல்லா மட்டும் இல்லாதிருந்தால், கொலம்பஸ் தான் கண்ட கனவுகளை உள்ளத்திலே அழுத்தி அழுத்தவைத்துக் கொண்டு பித்தம் பிடித்தவனாய்ப் போயிருப்பான், அல்லது, நடைப் பிணமாக வாழ்க்கை நடத்திக் கொண்டு இருந்திருப்பான். தனக்கு ஆதரவு தந்த அரசியின் ஈமச் சடங்குகளில் கலந்து கொள்ளக் கூட கொலம்பசால் முடியவில்லை. அவனுடைய மூட்டுவாதம் அதிகமாகி அவனைப் படுத்த படுக்கையாக்கி விட்டது.

செவிலியில் உள்ள சாண்டா மேரியா தேவாலயத்தைச் சேர்ந்த ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தான் கொலம்பஸ். பொருளாதார நிலையைப் பொறுத்தவரை, அவன் அப்போது போதுமான அளவு செல்வம் வைத்திருந்தான்