145
அரசர் பெர்டினாண்ட் அவனை அன்போடு வரவேற்றா. கொலம்பஸ் ஒப்பந்தப்படி கேட்பதெல்லாம் கொடுக்கக் கூடிய நிலையிலோ, மனப்பாங்கிலோ அரசர் இல்லை. கொலம்பஸ் தன் ஒப்பந்தப்படி உள்ள உரிமைகளை யெல்லாம் விட்டுக் கொடுத்துவிட்டால், அவனுக்கு நல்ல வரும்படி வரக்கூடிய பெரும் பண்ணை ஒன்றையளிப்பதாகக் குறிப்புக் காட்டினார் அரசர். அதற்கெல்லாம் கொலம்பஸ் சிறிதும் ஒப்புக் கொள்ளவில்லை. கிடைத்தால் முழுவதும் கிடைக்க வேண்டும் இல்லாவிட்டால் எதுவும் வேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறிவிட்டான் அவன், அவனுக்கு எதுவும் கிடைக்காமலே போய்விட்டது.
அரசர் செல்லுமிடமெல்லாம் அவனும் தொடர்ந்து சென்றான். . ஓராண்டு, சென்றபின்னும் அவனுடைய வேண்டுகோள் செவிசாய்க்கப்படவில்லை. அவனுடைய மூட்டுவாதம் அதிகரித்துக் கொண்டேவந்தது. எப்படியும் கடைசியில் தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. எல்லாம் தனக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவன் ஓர் உயில் எழுதி வைத்தான்.
தனக்கு வரும் வரிவருமானங்களையெல்லாம் சிலுவைப் போர் நிதிக்குக் கொடுக்க வேண்டும் என்று எழுதிவைத்தான். ஜினோவாவில் தன் பரம்பரையினருக்காக ஒரு மாளிகை எழுப்ப வேண்டுமென்று எழுதி வைத்தான். இஸ்பானியோலாவில் ஒரு தேவாலயம் கட்டி அவன் ஆத்மா சாந்தியடைய நாள் தோறும் தொழுகை நடத்திவர வேண்டும் என்று எழுதி வைத்தான். இந்த நற்செயல்களுக்குப் பயன்படுவதற்காகவாவது அரசர் மனத்தை மாற்றி அத்தனையும் கிடைக்குமாறு ஆண்டவன் அருள் புரியமாட். டாரா என்று எண்ணினான் கொலம்பஸ்.