பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147

போனால், கொலம்பசே, தான் கண்டுபிடித்துள்ள இடம் மிகப் பெரியதும், மிக வளமுள்ளதுமான அமெரிக்கக் கண்டம் என்பதை உணர்ந்து கொள்ளவில்லை. காலமும் நேரமும் அவன் பாடுபட்டுக் கண்டுபிடித்ததன் பலனை அனுபவிக்காமல் செய்துவிட்டன.

நாளாக ஆகத்தான் அவன் பெருமை மக்கள் மனத்தில் இடம் பெற ஆரம்பித்தது. யாரோ நாங்கள் தான் அமெரிக்காவைக் கண்டுபிடித்தோம் என்று சொலலிக் கொண்டதெல்லாம் தவறான செய்திகள் என்பதும், உண்மையில் அதைக் கண்டுபிடித்தவன் கொலம்பஸ் என்பதும் பிற்காலத்தில் உறுதிப்பட்ட செய்தியாகிவிட்டது. இன்று கொலம்பஸ் உலகவரலாற்றிலே, ஒரு முக்கியமான இடம் பெற்றுவிட்டான். காலகாலத்திற்கும் அவன் பெயர் ஒளி வீசித் திகழும் தன்மையைப் பெற்றுவிட்டது.

கொலம்பஸ் இறந்து மூன்றாண்டுகளானபின், அவனுடைய மகன் டோன் டீகோ இஸ்பானியோலாவின் கவர்னராக நியமிக்கப் பெற்றான். அவனுக்குரிய பரம்பரைப் பட்டங்களும் அளிக்கப் பெற்றன. இச்செயல் மூலம் ஓரளவு கொலம்பசின் விருப்பம் அரசரால் நிறைவேற்றப்பட்டது என்றே சொல்ல வேண்டும். கொலம்பஸ் தெய்வபக்தியுள்ளவன்; அதைக் காட்டிலும் மதபக்தி நிரம்பியவன். சிவப்பு இந்தியர்களை அவன் மனமறிந்து கொடுமைப் படுத்திய துண்டு: அடிமைகளாக்கி விற்றதுண்டு என்றாலும் பல சமயங்களில் அவன் அவர்களிடம் மனிதாபிமான உணர்ச்சியோடு நடந்திருக்கிறான். அவன் அவர்களைக் கொடுமையாக நடத்திய தெல்லாம் கால நெருக்கடியின் காரணமாகத்தான்.

தன் வாழ்வின் பெரும் பகுதியைக் கடலிடையிலேயே கழித்த அவன், தன் ஆராய்ச்சி வேட்கையின் காரணமாகப்