பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2


ஒளி தோன்றியது

மேற்கு நோக்கிப் புறப்பட்டுக் கடல் வழியாகக் கிழக்கை யடைய வேண்டும் என்ற எண்ணம் கொலம்பசுக்குத் திடுதிப்பென்று ஏற்பட்டு விடவில்லை. இந்த ஆவல் கொலம்பசுக்குத்தான் முதன் முதலில் ஏற்பட்டது என்று சொல்வதற்குமில்லை.

உலகம் உருண்டை என்ற உண்மை அப்போது மேல் நாடெங்கும் ஒப்புக்கொள்ளப்பட்ட தத்துவம் ஆகிவிட்டது. ஆகவேதான் பல பூகோள வல்லுநர்கள், கிழக்கே யிருக்கும் ஜப்பானுக்கு, மேற்கே புறப்பட்டுப் போய்ச் சேரலாம் என்று எண்ணலானார்கள். ஆனால், கடல்வழியாக எவ்வளவு தூரம் பயணம் செய்வது? எவ்வளவு தூரத்தில் ஜப்பான் இருக்கிறது? என்பதெல்லாம் தெரியாத நிலையில் யாரும் துணிந்து புறப்படுவதற்கில்லை.

அக்காலத்தில் உலகெங்கிலும் புகழ்பெற்ற பல பூகோள வல்லுநர்களின் நூல்கள் கிடைத்தன. அந்த நூல்களெல்லாம், இப்போதைப்போல திட்டவட்டமான