பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

குடியேறி வாழ்ந்தார்கள் என்றும், அவர்கள் வமிச் வழியாக அங்கேயே வாழ்ந்து வருகிறார்கள் என்றும் ஒரு கர்ண பரம்பரைச் செய்தி நிலவி வந்தது. அந்த அண்டிலாத் தீவைக் கண்டு பிடித்தால் அந்த மாலுமிகள் அந்தத் தீவின் தலைமையைப் பரம்பரையாக அனுபவிக்கலாம் என்றும் அதற்குரிய சிறப்புக்களையும் பட்டங்களையும் அடையலாம் என்றும் அரசர் வாக்களித்திருந்தார். அந்த இரு மாலுமிகளும் மேற்கு நோக்கி நாற்பது நாட்கள் வரை பயணம் மேற்கொள்வதென்றும், அதற்கிடையிலே அந்தத் தீவைக் கண்டு பிடிக்காவிட்டால் திரும்பி விடுவதென்றும் ஏற்பாடாகியிருந்தது.

உண்மையில் அண்டிலா என்பதாக ஒரு தீவே கிடையாது. இல்லாத அந்தத் தீவைக் கண்டு பிடிக்க முயற்சி யெடுத்துக் கொண்ட அரசர், இருக்கின்ற கீழை நாடுகளுக்குப் புதுவழி கண்டு பிடிக்க முயன்ற கொலம்பசுக்கு ஆதரவளிக்காததற்குக் காரணம் அவனுடைய அதிகப்படியான ஆசை மிகுந்த வேண்டுகோள்களேயாகும் என்று நம்பலாம்.

போர்ச்சுகீசிய மன்னர் ஆதரவளிக்க மறுத்த அதே 1485-ம் ஆண்டில், அவன் மனைவி டோனாபெலிப்பாவும் லிஸ்பன் நகரில் இறந்துவிட்டாள். அத்தோடு போர்ச்சுக் கீசிய நாட்டில் அவனுக்கிருந்த உறவும் அறுபட்டது. தன் முயற்சியை மேற்கொள்வதற்கு அவனுக்கு எப்படியும் ஓர் அரசர் அல்லது அரசாங்கத்தின் உதவி தேவைப் பட்டது. இனிப் போர்ச்சுக்கீகிய மன்னரை நம்புதற்கிடமில்லை என்று ஏற்பட்ட பிறகு, அவன் ஸ்பெயினிலே போய் முயற்சி செய்து பார்க்கலாம் என்று எண்ணமிட்டான்.

ஸ்பெயின் நாட்டிலே, அவன் மனைவியின் சகோதரி ஒருத்தி ஒரு ஸ்பானியனைத் திருமணம் புரிந்து கொண்டு ஹசல்வா என்ற ஊரிலே யிருந்தாள். அவளைத் தவிர வேறு-