பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

வேட்கைகளையும் கண்டறிந்த அவர், பல மரக்கலங்களுக்குச் சொந்தக்காரரும், ஸ்பெயின் தேசத்துப் பிரபுக்களிலே ஒருவருமான மெடினாசீலிச் சீமானுக்கு அவனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

சீமான் மெடினா சீலியிடம் கொலம்பஸ் கேட்டதெல் லாம் மூன்று அல்லது நான்கு வசதி பொருந்திய மரக் கலங்கள் தான். சீமான் மெடினா சீலி அதற்குச் சம்மதித் தாலும், கொலம்பஸ் தன் ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கும், ஸ்பெயின் நாட்டிலிருந்து கப்பல்கள் புறப்படுவதற்கும் அரசாங்கத்தின் அனுமதி பெறவேண்டியிருந்தது.

அப்போது ஸ்பெயின் தேசத்தை ஆண்டு வந்தவள் அரசி இசபெல்லா. இசபெல்லா கத்தோலிக்க சமயத்தில் தீவிர பற்றுதல் கொண்டவள். தெய்வப் பற்றும் சமயப் பற்றும் சிறந்த ஆட்சித்திறனும் கொண்டவள். ஐரோப்பிய அரசர்களிலேயே வலிவும் திறனும் புகழும் பெருமையும் கொண்டவளாக அக்காலத்தில் சிறந்து விளங்கினாள் அவள்.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்

இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

என்ற திருக்குறட் பாக்களுக்கு இலக்கியமாய் ஒரு செயலை முடிக்கச் சரியான ஆளைத்தேர்ந்தெடுப்பதிலும், சரியான நேரத்தில் செய்வதிலும் அவள் வல்லவளாய் விளங்கினாள்.

அரசி இசபெல்லாவைப் பேட்டி காணக் கொலம்பஸ் ஒன்பது மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. காரணம், அவன் ஸ்பெயினுக்கு வந்து சேர்ந்த சமயம், அவள் அரசியல் வேலையாக ஒவ்வோர் ஊராகச் சென்று