பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

போர்ச்சுக்கல் போய்ச் சேர்ந்த சமயம், பார்த்தலோமியோ டயஸ் தன் மூன்று கப்பல்களுடன் வெற்றிப் பெருமிதத் துடன் திரும்பிவந்து சேர்ந்தான். அவன் ஆப்பிரிக்காவின் தென் முனையைச் சுற்றிக் கொண்டு கீழ்க்கரைப் பகுதியை அடைந்து விட்டதாகவும். அங்கிருந்து இந்தியா போவது எளிதென்றும், ஆனால் நெடுநாளாகி விட்டதால் தன் ஆட்கள் கட்டாயத்துக் கிணங்கத் தான் தாய் நாடு திரும்பி விட்டதாகவும் அரசருக்குச் செய்தி சொன்னான் அந்தக் கப்பல் தலைவன்.

இந்தியாவை அடைவதற்கு நிச்சயமான ஒருவழி கண்டு பிடித்த பிறகு ஏன் சந்தேகத்திற்கிடமான கொலம்பஸ் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்று கருதத் தொடங்கினார் ஜான் அரசர். ஐயத்திற்கிடமான விஷயத்தில் பணம் செலவழிப்பது வீண் என்ற கருத்து அவருக்கு ஏற்பட்ட பின் கொலம்பஸ் அங்குச் சென்றதே வீணாகிவிட்டது.

கிறிஸ்டாபர் கொலம்பசும் அவன் தம்பியும் கூடி யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார்கள். டால்வெரா குழுவினர் உடனடியாக முடிவு கூறாவிட்டாலும் எப்படியும் நல்ல முடிவுக்கு தன் கனவுகள் பலிக்கும் படியான முடிவுக்கு வருவார்கள் என்ற நம்பிக்கை, அடியோடு மாண்டு போய் விடவில்லை. எனவே கொலம்பஸ் ஸ்பெயின் திரும்பினான். அவன் தம்பி பார்த்தலோமியோ கொலம்பஸ், அண்ணனுடைய திட்டத்துக்கு ஆதரவு தேட பிற ஐரோப்பிய நாடுகளில் முயற்சி செய்வதென்று புறப்பட்டான்.

முதலில் அவன் இங்கிலாந்து சென்றான். அப்போது இங்கிலாந்தை ஆண்டவர் ஏழாம் ஹென்றி. பார்த்த லோமியோ கொலம்பஸ் என்ன விளக்கிச் சொல்லியும்