பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29



அவர்கள் அரசிக்குக் கூறினார்கள். மேற்குப்புறமாகத் சென்று ஆசியாவை அடைய நெடுந்தூரம் கடல்வழி செல்ல வேண்டுமென்றும் அவ்வளவு தூரத்தைக் கடந்து செல்ல சுமார் மூன்று ஆண்டுகளாவது பிடிக்கும் என்றும். ஆகவே கொலம்பஸ் திட்டம் பயனற்றது என்றும் அவர்கள் அரசிக்குக் கூறினார்கள்.

இந்த முடிவு கொலம்பசின் தலையில் இடி விழுந்தது போலிருந்தது. எத்தனைபேர் மறுத்துச் சொன்னாலும் கொலம்பசுக்குத் தன் திட்டத்திலே அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. தன் திட்டத்துக்கு ஆதரவு கிடைக்கும் என்னும் நம்பிக்கையைத்தான் அவன் இழக்க வேண்டியிருந்தது. குழுவினர் தீர்மானமாக முடிவு சொல்லி விட்டாலும் இசபெல்லா கொலம்பசின் நம்பிக்கையை அடியோடு வெட்டிவிடவில்லை. மூர் இனத்தாரோடு நடைபெறும் சண்டை முடிந்தபின் மீண்டும் அவன் விண்ணப்பித்துக் கொண்டால் தான் மறுபடி இவ்விஷயத்தை ஆலோசனைக்கு எடுத்துக்கொள்வதாகச் சொல்லி அவனுக்கு ஆறுதல் கூறினாள். மீண்டும் ஓராண்டு ஸ்பெயினில் இருந்து பார்த்தான். மூர்ச்சண்டை முடிவதாகத் தெரியவில்லை. தன் மகனை அழைத்துக் கொண்டு பிரான்ஸ் சென்று தன் தம்பியுடன் சேர்ந்து கொள்ள எண்ணினான். தன் மகனை மடத்திலிருந்து அழைத்துக் கொள்வதற்காக அவன் சென்ற பொழுது அங்கு, அந்த மடத்தின் தலைவர் ஜீவான் பெரிஜ் பாதிரியார் மீண்டும் ஒருமுறை அரசி இசபெல்லாவுக்குக் கடிதம் எழுதிப் பார்க்கும்படி வற்புறுத்தினார். அவ்வாறே எழுதினான்.

கருணை பொருந்திய அரசி இசபெல்லா, கொலம்பசைத் தன்னை வந்து பார்க்கும்படி பதில் எழுதியதோடு , வழிச் செலவுக்கும், புதிய உடை வாங்குவதற்கும் ஒரு குதிரை