பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

நெடுந்தூரம் வரை சென்றும் நிலப்பகுதி எதுவும் தென்பட வில்லை. மாலுமிகள் மறுபடியும் கிளர்ச்சி செய்யலானார்கள்.

"தலைவரே, கப்பலைத் திருப்புங்கள்! இல்லா விட்டால்..." என்று மேற்கொண்டு சொல்லாமலே அச்சுறுத்தினார்கள்.

ஆனால், உறுதி மாறாத கொலம்பஸ் இதற்கெல்லாம் நடுங்கி விடவில்லை. அவன் அவர்களுக்கு உற்சாகமான மொழிகளைக் கூறினான். "அஞ்சாதீர்கள்! நம் இலட்சியம் ஈடேறும் வரை பயணம் நீடிக்கத்தான் வேண்டும். கீழ்த் திசையில் இருக்கும் இந்திய நாடுகளை அடைந்துவிட்டால் அடையப் போகும் இலாபத்தை எண்ணிப் பாருங்கள்" என்றெல்லாம் ஆசை வார்த்தைகளை அள்ளி விட்டான். எல்லாம் வல்ல இறைவன் நமக்குத் துணை புரிவார் என்று நம்பிக்கையை வளர்த்தான். மேலும் மூன்று நாட்களுக்குள் நிலப்பகுதி தட்டுப்படவில்லை என்றால், திரும்பிவிடுவதாக அவர்களுக்கு உறுதியும் கூறினான்.

அந்த மூன்று நாட்களும் கடந்தன. எல்லோருக்கும் அலுத்துப்போய் விட்டது. மூன்றாவதுநாள் அந்திச் சமயத்தில் அவர்கள் நிலப்பகுதி எதையும் கண்ணால் காணா விட்டாலும், இலையும் பூவுமாக ஒடிந்து விழுந்த மரக்கிளைகள் பல ஆங்காங்கே கடலில் மிதந்து சென்றதைக் கப்பல்களில் இருந்தவர்கள் காண நேரிட்டது. அந்த மரக் கிளைகளைக் கண்ணுக்கு நேரே கண்டவுடன் முணு முணுப்பும் சலசலப்பும் ஓய்ந்தன. மாலுமிகள் அனைவரும் உண்மையிலேயே நம்பிக்கையும் உற்சாகமும் கொண்டார்கள்.

கொலம்பஸ் அவர்கள் உற்சாகத்தை அதிகப்படுத்தினான். அந்தக் கப்பல்களில் புறப்பட்டுச் சென்ற மாலுமி-