பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5




புகழ் கிடைத்தது


கொலம்பஸ் தலைமையில் புறப்பட்ட அந்தக் கப்பல் தலைவர்கள், கடலனுபவம் நிறைந்த பெரும் வல்லுனர்கள். அவர்கள் கரையைக் கண்ட ஆனந்தத்தில் உடனே கரை நோக்கி வேகமாகப் பாய்ந்து சென்றுவிடவில்லை. அவ்வாறு கண்ணை மூடிக்கொண்டு சென்றிருப்பார்களேயானால், கடலுக்கடியிலே மறைந்திருந்த செங்குத்துப் பாறைகளிலே மோதிக் கப்பல் உடைந்து சுக்கு நூறாகி யிருக்கும். கொலம்பஸ் எல்லாக் கப்பல்களிலும் பாயைத் தாழ்த்தச் சொன்னான். அவ்வாறே பாய்கள் இறக்கிச் சுருட்டப்பட்டன. கப்பல்கள் மெல்லமெல்ல ஆடி அசைந்து கொண்டிருந்தன. பொழுது விடியும் நேரத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். காலை மலர்ந்து எல்லாம் தெளிவாகத் தெரியத் தொடங்கியவுடன் மீண்டும் பாய்களை ஏற்றிக் கொண்டு கண்ணுக்குத் தென்பட்ட அந்தத் தென்முனையைக் கடந்து சென்றார்கள். மேல் கரையில் பாறைத் தொடர்ச்சிக்கிடையே ஏதாவது வழி தெரியுமா என்று ஆராய்ந்து கொண்டே சென்றார்கள். நண்பகலில் ஓர் ஆழமில்லாத வளைகுடாவைக் கண்டுபிடித்தார்கள்