பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

ரோட்ரிகோ என்ற மாலுமிக்கு இதெல்லாம் பெருமையாக இருந்தது. ஏனெனில் ஆப்பிரிக்க நீக்ரோக்கள் அவனை இவ்வளவு மரியாதையாக நடத்தவில்லை. இது சிறந்த அனுபவமாக இருந்தது. ஆனால் அரபு மொழிப் புலவனான லூயிஸ் டிடோர்சுக்கு இதெல்லாம் ஒன்றும் பிடிக்கவேயில்லை. அந்தக் காட்டு மிராண்டிகளில் ஒருவனுக்குக்கூட அரபு தெரியவில்லை. என்ன பயன்?

அந்தத் தூதர்கள் இருவரும் துறைமுகத்துக்குத் திரும்பும் வழியில் ஒரு புது விஷயத்தைக் கண்டுபிடித்தார்கள். அந்தச் சிவப்பு இந்தியர்களில் சிலர் கையில் கொள்ளிக்கட்டை மாதிரி ஏதோ ஒன்று வைத்திருந்தார்கள். அதை அடிக்கடி வாயில் வைத்து இழுத்துப் புகை விட்டார்கள். அது என்ன என்று கேட்டதற்கு டுபாக்கோ என்று கூறினார்கள். அவர்களைப் பார்த்து ஸ்பானியர்கள் சுருட்டுப் பிடிக்கும் பழக்கத்தை மேற் கொண்டார்கள். பின்னால் சென்ற சென்ற நாட்டிலெல்லாம் ஸ்பானியர்கள் இந்தப் பழக்கத்தைப் பரப்பி விட்டார்கள். இன்று அது உலகெங்கும் பரவி விட்டது.

அந்தத் தூதுக் குழுவினரை யனுப்பிவிட்டு கொலம்பஸ் தான் கண்டு பிடித்த நாடு இந்தியா தான் என்பதற்கு ஆதாரங்கள் சேர்க்கத் தொடங்கினான். கருவப்பட்டை போல் மணக்கும் ஒரு பூண்டைக் கருவப்பட்டை என்று நினைத்துக்கொண்டு சேகரித்தான், அதுபோல் பசைப் பொருள் ஒன்றைக் கண்டு அதுதான் ஆசியாவில் கிடைக்கும் குங்கிலியம் என்று எண்ணிக் கொண்டான். ஏதோ ஒரு கொட்டையைக் கண்டெடுத்து அதுதான் மார்க்கோபோலே என்பவன் விளக்கிக் கூறியுள்ள தேங்காய் என்று நினைத்துக் கொண்டான். ஏதோ ஒரு வேர்க் கிழங்கை அவனுடைய ஆட்கள் தோண்டி எடுத்தார்கள், அது சீன நாட்டுக் கிழங்கு வகையைச் சேர்ந்ததென்று நினைத்-