பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/63

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

செலோனா என்ற ஊரில் தங்கியிருந்த பேரரசர் பெர்டினாண்டுக்கும் பேரரசி இஸபெல்லாவுக்கும் செய்தியனுப்பினான். தான் நேரில் வந்து சந்திக்க அனுமதி கேட்டிருந்தான். ஆனால், அவர்கள் கொலம்பசே நேரில் வந்து கூறட்டும் என்று கூறி அனுமதி வழங்க மறுத்து விட்டார்கள். அங்கிருந்து புறப்பட்டவன்தான் விஸ்பனிலிருந்து வந்த நைனாவைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான்.

மார்ச் 15-ஆம் நாள் பாலோஸ் துறைமுகத்தில் நைனா கப்பல் நங்கூரம் பாய்ச்சியது. பின்னால் வந்து கொண்டிருந்த பிண்டாவும் அங்கு வந்து சேர்ந்தது. ஏற்கனவே அங்கு நின்று கொண்டிருந்த நைனாவைக் கண்டதும், தனக்கு ஒரு மாதம் முன்னதாகவே அது வந்து விட்டதுபோல் எண்ணிக் கொண்டான் பிண்டாக் கப்பலின் தலைவன். அரசரும் அரசியும் தன்னைக் காண மறுத்தது வேறு அவனுக்குத் தாங்க முடியாத அவமானமாக இருந்தது: கடுமையான கடற் பயணம் வேறு முதுமையான அவன் உடலைப் பாதித்திருந்தது. கப்பலைப் பாலோஸ் துறைமுகத்தில் நிறுத்திய அவன், கொலம்பசையோ வேறு யாரையுமோ பார்க்காமல் நேரே தன் வீட்டுக்குப் புறப்பட்டு விட்டான். உடலும் உள்ளமும் பாதிக்கப்பட்ட அவன் நோய் வாய்ப்பட்டு சுமார் ஒரு மாதத்தில் மனக் குறையுடனேயே இறந்து போய் விட்டான்.

கொலம்பஸ் லிஸ்பனில் இறங்கியபோது தன் பயணத்தின் விபரத்தைக் குறித்துக் கடிதம் எழுதி பேரரசியாருக்கும் பேரரசரக்கும் அனுப்பி விட்டான். பாலோஸ் துறை முகத்தில் இறங்கியவுடன் மீண்டும் அந்தக் கடிதத்தின் நகல் ஒன்றைப் பேரரசியார்க்கு அனுப்பினான். சோர் டோலா என்ற ஊரில் அவன் திருமணம் செய்து கொள்ளாமல் எடுத்து வைத்திருந்த மனைவி பீட்ரிஜுக்கும் செய்தி