பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

யனுப்பினான். அவள் மூலம் அவனுக்குப் பிறந்த பையன் ஒருவன் இருந்தான். அவனுக்கு அப்போது ஐந்து வயதிருக்கும். அவன் முதல் மனைவியின் மகனும் அப்போது அவளுடன் இருந்தான்.

ஏப்ரல் மாதம் 7-ஆம் நாள் அரசி இசபெல்லாவும் அரசர் பெர்டினாண்டும் கடிதம் எழுதியிருந்தார்கள். அதில் கொலம்பசின் பெயருக்கு முன்னால், அவனுடைய பட்டங்கள் குறிக்கப்பட்டிருந்தன.

தாம் கண்டு பிடித்த இந்தியத் தீவுகளின் ஆட்சித் தலைவரும் அரசப் பிரதிநிதியுமான பெரும் கடல் தளபதி டோன்கிரிஸ்டோபர் கோலோன் அவர்களுக்கு என்று அரசாங்க பாணியில் அவன் பெயர் குறிப்பிடப்பட்டு வந்த கடிதத்தின் மேலுறையைப் பார்த்தவுடனேயே அவனுக்கு ஆனந்தம் பொங்கி வழிந்தது. அந்தக் கடிதத்தில் மீண்டும் இரண்டாவது பயணம் ஒன்று சென்று வர ஆயத்தங்கள் செய்யும் படியும் குறிக்கப்பட்டிருந்தது.

தன் பயணத்தின் பலன் நிறைவெய்தியது என்ற களிப்புடன் அவன் அரசரையும் அரசியையும் காண ஆயத்தங்கள் செய்தான். அவர்களுக்குத் தன் எண்ணத்தை விளக்கி ஓர் அறிக்கையும் தயாரித்தான்.

இஸ்பானியோலா பகுதியில் ஸ்பெயின் மக்கள் குடியேறுவதற்கும். குடியேறித் தங்கித் தங்க வாணிபம் செய்வதற்கும் உள்ள வாய்ப்புக்களை எடுத்து விளக்கியிருந்தான். இரண்டாயிரம் பேர் வரை அங்குக் குடியேறலாம் என்றும், அவர்கள் அங்கு ஒரு பட்டணம் அமைத்துக் கொள்ளலாம் என்றும், அந்தப் பட்டணத்தில் இருந்து கொண்டு நாட்டுப் பகுதியில் சென்று வியாபாரம் செய்து கொண்டு வரலாம் என்றும், அவர்கள் கொண்டு வரும் தங்கத்தை நிறுத்துப் பார்த்து, அரசர்க்குரிய ஐந்து பங்கும், கடல் தளபதிக்குரிய பத்துப் பங்கும், தேவாலயத்துக்குரிய