பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/67

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6




கடிதம் கிடைத்தது

கொலம்பஸ் தான் கண்டு பிடித்த தீவுகளைப் பற்றியும். தன் எதிர்காலத் திட்டங்களைப் பற்றியும் பேரரசியார்க்கும் மாமன்னர்க்கும் எழுதிய கடிதம் சுவையானது. அவன் அக்கடிதத்தை மாமன்னரின் தனிச் செயலாளரான சாண்டாஞ்சலுக்கு அனுப்பியிருந்தான். அக்காலத்தில் ஸ்பெயினில் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், அரசவையைச் சேர்ந்தவர்களும் தான் அரசர்களுக்கு நேரடியாகக் கடிதம் எழுதலாம். மற்றவர்கள் எழுதுவது மரியாதைக் குறைவென்று கருதப்பட்டது. எனவே தான், தன் பயணத்துக்கு முற்றிலும் உதவியாயிருந்த சாண்டாஞ்சலுக்கு எழுதி, அவன் மூலம் அரசர்க்கும் அரசிக்கும் தகவல் அறிவிக்கச் செய்தான் கொலம்பஸ். 1493-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15-ஆம் நாள் நைனாக் கப்பலில் உட்கார்ந்து எழுதிய இக்கடிதத்தைத்தான், கொலம்பஸ் தான் லிஸ்பன் துறைமுகம் வந்து சேர்ந்தவுடன் மார்ச் மாதம் 14-ஆம் நாளன்று அரசவைக்கு அனுப்பினான்.

இக்கடிதம் கொலம்பஸ் கடிதம் என்று பெயரிடப் பட்டு இன்று உலகத்திலேயே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு