பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/68

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

பத்திரமாகக் கருதப்படுகிறது. இக்கடிதத்தைக் கொலம்பசின் சொற்களிலேயே அப்படியே மொழி பெயர்த்துக் கீழே கொடுத்திருக்கிறோம்:

ஐயா,

நம் இறைவன் என் பயணத்திற்களித்த பெரும் வெற்றியை அறியத் தாங்கள் மிக மகிழ்ச்சியடைவீர்கள் என்றறிந்தே இக்கடிதத்தைத் தங்களுக் கெழுதுகிறேன். நம் அரசர் பெருமானும் பெருந்தகை அரசியாரும் அளித்த கப்பல்களுடன் நான் முப்பத்து மூன்று நாட்களில் இந்தியத் தீவுகளை யடைந்தேன். எண்ணிக்கையற்ற மக்கள் வாழும் பற்பல தீவுகளை நான் அங்கே கண்டேன். மேன்மை மிக்க அரசர் பெருமானுக்கும் அரசியாருக்கும் சார்பாக நான் அவற்றையெல்லாம் நம் உடைமையாக்கினேன். நம் அரசுக் கொடியுடன், நான் இத்தீவுகளை நம் அரசுக்கு உரிமையாக்கிச் செய்த அறிவிப்பை யாரும் மறுத்துரைக்கவில்லை.

நான் முதன் முதலில் கண்ட தீவுக்கு அதிசயமான இத்தீவுகளையெல்லாம் அளித்த விண்ணகத்தின் இறைவன் நினைவாக சான் சால்வடார் என்ற அவன் பெயரையே சூட்டினேன். இத்தீவை அங்குள்ள மக்கள் குனாகானி என்று அழைக்கிறார்கள். இரண்டாவது தீவுக்கு இஸ்லாடி சாண்ட மாரியா என்றும் மூன்றாவதற்கு பெரான்டினா என்றும் நான்காவதற்கு லா இஸ்லா பெல்லா என்றும், ஐந்தாவதற்கு லா இஸ்லா ஜுலானா என்றும் பெயரிட் டேன். இவ்வாறாக நான் கண்டு பிடித்த ஒவ்வொரு தீவுக்கும் ஒவ்வொரு புதுப் பெயரிட்டேன்.

ஜுலானாத் தீவை நான் அடைந்தவுடன் அதன் மேல் கரையோரமாகச் சென்றேன். அப்பகுதிதான் சீன நாட்டைச் சேர்ந்த கத்தேயோ மாநிலமாக இருக்குமோ