பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7




மனங் கசந்தது

கொலம்பஸ், அரண்மனை விருந்தாளியாய், பார்சலோனா நகரில் தங்கியிருந்தபொழுது அவனுக்கு மிக மகிழ்ச்சியளித்த நிகழ்ச்சி தன்னுடன் வந்த ஆறு இந்தியர்களையும் கிறிஸ்தவர்களாக மாற்றி ஞான நீராட்டியதுதான். கிறிஸ்தவர்களாக மாறிய அவர்களுக்கு ஞானத்தாய் தந்தையராக இருக்க அரசர் பெர்டினாண்டும், அரசி இசபெல்லாவும், இளவரசர் டோன் ஜுவானும் அருள் கூர்ந்து இசைந்தார்கள். அந்த ஆறு இந்தியர்களுக்கும் கிறிஸ்தவப் பெயர்கள் சூட்டப்பட்டன. அவர்களில் ஒருவன் தலைவன் குவாக்க நாகரியின் உறவினன். அவன் அரண்மனையிலே வேலைபார்த்துக் கொண்டிருந்து இரண்டாண்டுகளுக்குப் பின் இறந்துவிட்டான். மற்ற ஐந்து பேரும் மீண்டும் கொலம்பஸ் தான் கண்டுபிடித்த இடங்களுக்குப் புறப்பட்டபொழுது கூடச் சென்றார்கள்.

கொலம்பஸ் தன் பயணத்தைப்பற்றி எழுதிய அறிக்கை, அவன் பார்சலோனா சென்ற சிலநாட்களில் அச்சிடப் பெற்றது. அச்சிட்ட பிரதிகள் ஐரோப்பிய நாடுகள்