பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/8

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6

பெயரைக் கூவியழைத்தது. “கிரிஸ்டாபர்! கிரிஸ்டாபர்!” என்று அந்தக் குழந்தை யழைத்த குரல் அவர் தூக்கத்தைக் கலைத்தது. “கிரிஸ்டாபர், என்னை அக்கரையில் கொண்டு போய் விடு” என்று அந்தக் குழந்தை கூவியது. உடனே பெரியவர் தம் கைத்தடியுடன் வெளியில் வந்தார். அந்தக் குழந்தையைத் தன் தோளில் தூக்கி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடக்கலானர். அவர் ஆற்றைக் கடந்து நடக்க நடக்கத் தோளில் இருந்த குழந்தையின் எடை அதிகரித்துக் கொண்டேயிருந்தது. பளுவைத் தாங்க முடியாமல் அவர் கால் இடறியது. தட்டுத் தடுமாறிக்கொண்டு, எப்படியோ பத்திரமாக அவர் அந்தக் குழந்தையை அக் கரைக்குக் கொண்டு போய்ச் சேர்த்துவிட்டார். அந்தக் குழந்தையைக் கீழே இறக்கிவிட்டு, “அப்பா, சிறுவனே! என்னைப் பெரிய ஆபத்தில் சிக்க வைக்க இருந்தாய்! உன்னைத் தூக்கியதற்கு இந்த உலகத்தையே தூக்கிச் சுமந்திருக்கலாம் போலிருக்கிறது எவ்வளவு பளு” என்று கூறினார் பெரியவர்.

“இதில் என்ன ஆச்சரியம் இந்த உலகம் முழுவதையும் இதைப் படைத்தவனையும் சேர்த்துத் தானே நீ சுமந்தாய்! பிறருக்கு நன்மை செய்வதன் மூலம் நீ எனக்குத் தொண்டு புரிந்தாய்! உன் கைத்தடியை அந்தக் குடிலின் வாயிலில் ஊன்றி வை. அது நாளைக்கே பூத்துக் காய்ப்பதைக் காணலாம். போற்றித் தொழும் அருட் காவலனும் இறைவனும் நானே என்பதற்கு அதுவே தக்க சான்றாய் அமையும்” என்று கூறி அந்தக் குழந்தை மறைந்து விட்டது.

கிரிஸ்டாபர், குழந்தை வடிவில் வந்த இறைவனின் கட்டளையை நிறைவேற்றினர்; மறுநாட்காலை உண்மையிலேயே அவருடைய கைத்தடி ஓர் அழகான பேரீச்சை மரமாக மாறிவிட்டது என்பது பழங்கதை.