பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

பெயரே வைக்கப்பட்டது. ஆனால் மாலுமிகள் அதை மரியாலாண்டி என்று அழைத்தார்கள். இவற்றில் பழைய கைனா கப்பலும் இருந்தது. இந்தக் கப்பல்களில் சென்ற ஆயிரம்பேருக்கு அரசினரின் சம்பளம் கிடைத்தது. இருநூறு பேர் தொண்டர்களாகப் புறப்பட்டனர். பெண்கள் யாரும் ஏற்றிச் செல்லப்படவில்லை.

1493 - ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25உ எல்லாக் கப்பல்களும் காடிச் துறைமுகத்திலிருந்து புறப்பட்டன. பதினேழு கப்பல்களிலும் வண்ணக் கொடிகள் கட்டியிருந்தது. பார்க்க மிகப் பிருமாண்டமான அழகுக் கண்காட்சியாக இருந்தது. ஒவ்வொரு கப்பலின் முன் கம்பத்திலும் ஸ்பெயின் அரசுக் கொடி கம்பீரமாகப் பறந்துகொண்டிருந்தது. பீரங்கி வேட்டுடன் தாரை தப்பட்டைகள் முழங்க வீணையின் இன்னிசையோடு கப்பல்கள் புறப்பட்ட காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

கானரித் தீவுகளையடைந்த கப்பல்கள், கடைசியாகக் கோமாராத் தீவுகளிலிருந்து புறப்பட்டன. அங்கிருந்து புறப்பட்டுச் சரியாக 22வது நாளில் டொமினிக்காத் தீவையடைந்தன. அந்தப் பயணத்தில் ஒரு நாள் இடிவிழுந்து சில பாய்களை முறிந்ததைத் தவிர வேறு எவ்விதமான இடையூறுகளும் ஏற்படவில்லை. பயணம் மிக இனிமையாக இருந்தது.

டொமினிக்காவைச் சேர்ந்த கப்பல்கள் அங்கு கரை பிடிக்கவில்லை. சரியான நுழைவாயில் இல்லாத்தால் அங்கிருந்து புறப்பட்டு மற்றொரு பெரிய தீவையடைந்தன. அந்தத் தீவிற்கு சாண்டாமேரியா டி குவாடலூப் என்று கொலம்பஸ் பெயரிட்டான். குவாடலூப் கரும்பு விளையும் நிலம்; வளம் பொருந்திய தீவு. கடற்கரையோரமாக குவாடலூப் மலையிலிருந்து விழுந்த ஒரு. நீர்வீழ்ச்சி