பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
8



பழி மிகுந்தது

வாணிகம் செய்வதற்குத் தோதாக ஒரு குடியேற்றப் பகுதியை உண்டாக்க வேண்டிய செயலில் கொலம்பஸ் இறங்கியபோது அது பெருஞ்சிக்கலாயிருந்தது. டாக்டர் சங்கா என்பவர் காரகோல் வளைகுடா பகுதியிலேயே குடியேற்ற நாட்டை உருவாக்கலாம் என்று கருதினார். அதற்குக் காரணம் அங்குள்ள குடிமக்கள், வெள்ளையரோடு நட்பாக இருந்தார்கள் என்பது தான். ஆனால், தங்கம் கிடைக்கக்கூடிய சிபாவோ அங்கிருந்து மிகத் தொலைவில் இருந்ததால், அந்தக் கருத்தைக் கொலம்பஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, நல்ல ஓர் இடத்தைத் தேடிக் கிழக்கு நோக்கிக் கப்பல்களைச் செலுத்தினான் கொலம்பஸ். ஆனால், எதிர்க்காற்றையும், கடல் நீரோட்டத்தின் வேகத்தையும் எதிர்த்துக் கிழக்கு நோக்கிச் செல்வது எளிதாக இல்லை. கடலில் முப்பத்திரண்டு மைல் கடந்து செல்ல இருபத்தைந்து நாட்கள் பிடித்தது என்றால், அந்தப் பயணம் எவ்வளவு இடர்ப்பாடும். முயற்சியும் உடையது என்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். மாலுமிகளும், கப்பலில் இருந்த மக்களும் அரத்துச் சலித்துக் களைத்துப் போனார்கள். 1494-ஆம்