பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

மக்களை இறக்கி விட்டுவிட்டுத் திரும்பவேண்டிய கப்பல்கள் பனிரெண்டு. அந்தப் பனிரெண்டு கப்பல்களிலும், ஓஜீடா கொண்டு வந்த மூன்று தங்கக் கட்டிகளை மட்டும் அனுப்பிவைத்தால் பேரரசர் தன்னை எப்படி மதிப்பார் என்று எண்ணிப் பார்க்கவே அருவருப்பாயிருந்தது. 'ப்படியும் கப்பல்களைத் திருப்பியனுப்பியாக வேண்டும் அவற்றைக் காவியாக அனுப்பலாமா? டோரிஸ் என்ற கப்பல் தலைவனின் தலைமையில் அப்பனிரெண்டு கப்பல்களும் திருப்பியனுப்பப் பெற்றன. அவற்றில் கொலம்பஸ் ஏற்றியனுப்பிய பொருள்கள் இவைதாம். கருவாப்பட்டை கடுமிளகு, சந்தனக் கட்டை, அறுபது கிளிகள், இருபத்தாறு அடிமைகள், தங்கக் கட்டிகள்! இவற்றில் கருவாப்பட்டை என்ற பெயரில் அனுப்பிய பொருளைக் கடித்துப் பார்த்தால் இஞ்சியின் சுவையுடையதாயிருந்தது. கடுமிளகு, மிளகைப் போலிருந்தாலும், அதற்குரிய வாசமற்றிருந்தது. சந்தனக்கட்டை என்ற பெயரில் சென்ற மரங்கள் சந்தன மரங்களின் குணங்களைக் கூடப் பெற்றிருக்கவில்லை. தங்கத்தின் மதிப்போ பதினாலாயிரம் சவரன்கள் தான்! இந்தச் சரக்குகளைப் பார்த்த அரசாங்க அதிகாரிகள், கப்பல் தலைவன் டேனிசைப் பார்த்துப் பரிகாசம் செய்தார்கள். "பொன் விளையும் பூமியான இந்தியாவிலிருந்து இந்த அற்பச் சரக்குகள் தானா அனுப்பி வைத்தார் உங்கள் பெருங் கடல் தளபதி" என்று கேட்டு அவர்கள் எள்ளி ககையாடினார்கள்.

பேரரசர்க்கும், பேரரசியார்க்கும் கொலம்பஸ் சாமர்த்தியமாகச் செய்தி சொல்லியனுப்பியிருந்தான். தங்கம் நிறையக் கிடைக்கிறது. ஆனால், அதை ஆற்று நீரிலிருந்து அரித்தெடுக்க வேண்டும். அதற்கு நாளாகும். மேலும் ஆட்கள் பலர் நோயில் வீழ்ந்துவிட்டார்கள். கிடைக்கும் தங்கத்தை உள் நாட்டிலிருந்து துறைமுகத்திற்கு எற்றிவரக்கூடிய சுமை விலங்குகள் கைவசம்