பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

மிருந்த தங்கத்தையெல்லாம் கைப்பற்றினான். அவர்களுடைய உணவுப் பொருள்களை அபகரித்துக் கொண்டான். இந்திய இளைஞர்களையும் பெண்களையும் அடிமைகளாகப் பிடித்துக் கொண்டான்.

இந்த நிகழ்ச்சிகள், குடிமக்களை ஸ்பானியர்களிடம் வெறுப்புக் கொள்ளும்படி செய்தன.

இவற்றைப் பற்றியெல்லாம் கேள்விப்படுவதற்கு முன்னால், கொலம்பஸ் தங்கம் கண்டுபிடிப்பதற்காகக் கியூபாவுக்கு போய்விட்டான். இசபெல்லாவிலிருந்து ஏப்ரல் மாதம் 24-ம் நாள் மூன்று கப்பல்களுடன் புறப்பட்டு 29-ம் நாள் கியூபாவில் இறங்கினான். வழக்கம் போல் ஒரு கொடியையும் ஒரு சிலுவையையும் நிறுத்தி கியூபாவை ஸ்பெயினுக்கு ஆதீனப்படுத்தினான். ஏப்ரல் 30-ல் போர்ட்டோகிராண்டி. துறைமுகத்தையடைந்தனர். கப்பல்களிலிலிருந்து இறங்கிய சிலர் கரைப் பகுதியைச் சுற்றிப் பார்த்து வரக் கிளம்பினார்கள். அப்போது அங்கே சில கியூபாக்கார இந்தியர்கள் கரையில் மீன் கறி சமைத்துக் கொண்டிருந்தார்கள். தங்கள் ஊர்த் தலைவன் மற்றொரு தலைவனுக்கு விருந்தளிப்பதற்காக அவர்கள் மீன் பிடித்துச் சமைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கரையில் இறங்கிய வெள்ளையர்களைக் கண்டவுடன் ஓட்டம்பிடித்தார்கள். வெள்ளையர்கள் அவர்களை விரட்டிப் பிடித்துச் சமையல் நடந்த இடத்திற்குக் கூட்டி வந்தார்கள். அவர்களுக்கு பருந்து மணிகளும், பிறபொருள்களும் பரிசாகக் கொடுத்தார்கள். ஆனால், அவர்கள் சமைத்த மீன்கறியைத் தின்பதற்கு வெள்ளையர்களுக்குப் பயமாக இருந்தது. அவர்கள் அதைத் தொடவேயில்லை என்பதைக் கண்டு அந்தச் சமையல் கூட்டத்தினர் மகிழ்ச்சியடைந்தார்கள். ஓரிருவர் ஸ்பானியர்களைச் சாப்பிடும்படி கேட்டுக் கொண்டார்கள். "சில நாட்கள் போகட்டும்; இந்த ஊர்ப்