பக்கம்:கடல்வீரன் கொலம்பஸ்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

கியூபாக் கரை தென்புறமாக வளையும் இடத்தை சையாம் வளைகுடா என்று நினைத்துக் கொண்ட கொலம்பஸ் தான் மாலாக்காவை அணுகி விட்டதாகவே கருதினான். அப்படியானால் ஏன் உலகத்தைச் சுற்றிக் கொண்டு எதிர்த் திசையில் சென்று ஸ்பெயினை அடையக்கூடாது என்றும் எண்ணினான். நல்ல வேளையாக இந்த எண்ணத்தை அவன் செயலில் நிறைவேற்றவில்லை. அதற்குக் காரணம் கப்பல்களில் போதிய உணவுப் பொருள்கள் இல்லாமையும், அவை பழுதுபார்க்கப் பட வேண்டியிருந்தமையுமேயாகும்.

ஆகவே அவன் இசபெல்லாவுக்கே திரும்பினான். ஜூன் 18-ஆம் நாள் திரும்பிய கப்பல்கள் செப்டம்பர் 28-ஆம் நாள் இசபெல்லாவை யடைந்தன. இசபெல்லாவை அடைந்தபோது கொலம்பஸ் நோயுற்றுப் படுத்த படுக்கையாகக் கிடந்தான். மாலுமிகள் அவனைத் தூக்கிக் கொண்டு வந்து கரையில் சேர்க்கும்படியாக அவன் நிலை மிக மோசமாக இருந்தது. அப்பொழுது ஆரம்பித்த மூட்டுவாத நோய், பிறகு சிறுகச் சிறுக வளர்ந்து அவனுடைய வாழ் .நாளின் கடைசிப் பத்து ஆண்டுகளையும் துயர மிக்கதாகச் செய்துவிட்டது.

இசபெல்லாவில் அவன் வந்து சேர்ந்தவுடன் கேள்விப்பட்ட செய்தி, அவனுக்குப் பெருமகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. ஆறு ஆண்டுகளாகப் பிரிந்திருந்த அவனுடைய சகோதரன் பார்த்தலோமியோ கொலம்பஸ் இசபெல்லாவுக்கு வந்திருந்தான் என்பதே அந்த நற்செய்தியாகும்.

கொலம்பஸ் தன் இரண்டாவது பயணத்தை மேற்கொள்ளும் போதே, பார்த்தலோமியோவும் கூட வர வேண்டும் என்று எண்ணினான். ஆனால், அவன் அனுட்பிய செய்தி போய்க் கிடைத்து அவன் புறப்பட்டு வந்து சேர்