பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


இயற்கை முறை வழிபாடுகள்

தொடக்க கால மக்களுக்குக் கடவுள் என்னும் ஒரு பொருளைப் பற்றிய அறிமுகம் இருந்திருக்க முடியாது. இப்போதும் ஒருவர் பிறப்பு முதல், இறப்பு வரை தனியிடத்தில் பிரித்து வைத்து வளர்க்கப்பெறின், அவருக்குக் கடவுள் பற்றிய அறிமுகமே இருக்க முடியாது. விலங்கு களைப் போல் காட்டுமிறாண்டிகளாக வாழ்ந்து வந்த தொடக்க கால மக்கள், வாழ்க்கையில் பல தொல்லைகளை எதிர் நோக்கினர் - சந்தித்தனர்; அத்தொல்லைகளை வெல்ல முடியாதவராய்த் திகைத்தனர். அந்நிலை யில், தம்மையும் மீறி-தமக்கும் மேலாக ஏதோ ஒர் ஆற்றல் இருப்பதாக உணர்ந்தனர்; உணர்வு நம்பிக்கை யாயிற்று. அந்த ஆற்றலின் உதவி கிடைத்தால் தொல்லைகளிலிருந்து - துன்பங்களிலிருந்து விடுபடலாம் -வெற்றி பெறலாம் என நம்பினர்; அந்த ஆற்றலையே கடவுள் என்னும் பொருளாகக் கற்பனை செய்தனர்; அதனால் கடவுள் உண்டாகிவிட்டார். கடவுள் பிறந்த வரலாறுகளுள் இஃது ஒருவகையாகும்.

நன்றி வழிபாடு

நமக்கு உதவி செய்தவர்களை நாம் மதிக்கிறோம்வணங்குகிறோம்-வாழ்த்துகிறோம். பிச்சைக்காரர்கள் சோறு இட்ட பெண்மணியைக் கும்பிட்டு வாழ்த்திச் செல்வது, இதற்கு ஒர் எளிய எடுத்துக்காட்டாகும். இன்னும் அரிய பெரிய எடுத்துக் காட்டுகள் பல தர முடியும். தொடக்க கால மக்கள், தமக்கு இலை, கீரை, கனி, கிழங்கு, நிழல் முதலியவற்றை அளித்த இயற்கைப் பொருள்கள் ஆகிய மரம்-செடி-கொடி-புதர்களை மதித்து நன்றி செலுத்தும் வகையில் வணங்கினர்வாழ்த்தினர். அப்பழக்கம் நாளடைவில் கடவுள் வழி பாடாக மாறியது. அவை இருக்கும் இடத்தில் ஏதோ