பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109


பெண்கள் பிறை நிலாவைத் தொழுவது மரபு என்னும் செய்தி தமிழ் நூல்களில் சுவைபெறக் கூறப்பட்டுள்ளது. மூன்றாம் பிறை நிலாவை வழிபடுவது மக்களிடையே மிகவும் இன்றியமையாமை பெற்றுள்ளது. ஆயிரம் முறை மூன்றாம் பிறை நிலாவை வழிபட்டவர் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார்; ஆயிரம் பிறை கண்டவர்’ என்று பெருமைப்படுத்தப் பெறுகிறார்.

ஒன்பான் கோள் வழிபாடு

மக்கள் ஞாயிறு, திங்கள் ஆகியவற்றோடு இன்னும் ஏழு கோள்களையும் (கிரகங்களையும்) இணைத் து : நவக்கிரக வழிபாடு (ஒன்பது கோள் வழிபாடு) என்னும் பெயரில் கோயில்களில் சிலைகள் செய்து வைத்து வழிபடு கின்றனர்: ஒன்பது கோள்களின் பெயர்கள் வருமாறு:1, ஞாயிறு (Sun), 2, திங்கள் (Moon), 3. செவ்வாய் (Mars), 4. புதன் (Mercury), 5. வியாழன் (Jupiter):6. வெள்ளி (Venus), 7. gads (Saturn), 8. இராகு (A Planet-caput Draconis), 9. கேது (A Planet—cauda Draconis) ஆகியவை ஒன்பான் கோள்கள் ஆகும். கோயில்களில் இந்த ஒன்பான் சிலைகளையும் மிகவும் நெருக்கமாக வரிசை மாற்றுமுறையில் அருகில்-அருகில் வைத்து, அந்தப் பகுதிக்குச் சனி ஈசுவரன் கோயில்’ என்ற பெயர் சூட்டி வழிபட்டு வருகின்றனர். இந்த ‘சனி ஈசுவரன் கோயில் பகுதியை ஒன்பது முறை வலம் வந்து வழிபடுவது வழக்கம். இந்தக் கோள்களை (Planets) வழிபடும் மரபும் ஒருவகை இயற்கை வழிபாட்டு முறையாகும்.

பசு வழிபாடு:

மக்கள் தம்மைப் பால் தந்து வளர்க்கும் பசுக்களை அன்னையாகக் கருதி, கோமாதா என்பது போன்ற பெயர்கள் இட்டு வழிபடுவதும் இந்தியாவில் தொன்று: