பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




11. செயற்கை முறைக் கடவுள் வரலாறு


கடவுள் தோற்றம் பற்றிய இயற்கை முறை வரலாறு இதுகாறும் கூறப்பட்டது; அஃதாவது-தொடக்க கால மக்கள் இயற்கைப் பொருள்களைக் கடவுளாகக் கற்பனை செய்தனர்-இயற்கைப் பொருள்களிலே கடவுள் தன்மை என்னும் ஒருவகை ஆற்றல் இருப்பதாகக் கருதினர் என்ப் தான வரலாறு தரப்பட்டது. கடவுள் தோற்றம் பற்றிய இயற்கை முறை வரலாறு இருப்பது போலவே செயற்கை முறை வரலாறும் உண்டு. மாந்தர்க்குள்ளேயே அரும் பெருஞ் செயல்கள் ஆற்றிய பெரியோர்களைத் தெய்வமாகக் கருதி வழிபடுவதும் செத்தவர்களைத் தெய்வமாக மதித்து வழிபடுவதும் செயற்கை முறை வரலாறுகள் ஆகும். இவ்விரண்டினுள் செத்தவர்களையெல்லாம் தெய்வமாகக் கருதி வழிபடுவது மிகப் பெரிய அளவில்பரந்த அளவில் நடைபெறுகிறது.


செத்துத் தெய்வமாதல்:

நல்லவர்கள் ஆயினும் - தீயவர்களாயினும் - இறந்தவர்கள் அனைவரையும் அவரவர் உறவினர்கள் தெய்வ மாகக் கருதி வழிபடுதல் மரபாயிருக்கிறது. அவர் செத்துத் தெய்வமாகப் போய்விட்டார்’ என்று கூறுவது