பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149


னும் பெயர் பெறுகிறது. அதை உடையவர் தெய்வமாக மதிக்கப் பெறுகிறார். இந்த அடிப்படையிலேயே வடலூர் இராமலிங்க வள்ளலார் தெய்வத் தன்மை பெற்றவராக மதிக்கப்படுகிறார். செருக்கான வாழ்க்கையை மேற்கொண்டிருந்த உமாபதி சிவாச்சாரியார், அந்த நிலையி லிருந்து கீழ் இறங்கி வந்து உயரிய அருளாளராக மாறியதும் தெய்வத் தன்மை அடைந்தவராகப் போற்றப்படுகிறார்.


பல்லைப் பிடுங்கிய பாம்பும், சர்க்கசு காட்சியில் வரும் யானை, புலி, கரடி, சிங்கம் முதலிய பழக்கப் படுத்தப்பட்ட விலங்குகளும் பிறர்க்குத் தீமை செய்யாதனவாய் இருப்பது போல், பண்படுத்தப்பட்ட மனிதன் மனிதத் தன்மையிலிருந்து தெய்வநிலைக்கு மாறுகிறான். நம்மால் வழிபடப்படுபவர்கள், இவ்வாறு, மனித நிலையிலிருந்து கடவுள் நிலைக்கு உயர்ந்தவர்களே.


‘மனிதரும் தெய்வம் ஆகலாம் என்ற தலைப்புக்கு இப்போது வருவோம். மனிதரும் என்பதில் உள்ள உம்மை இழிவு சிறப்பு உண்மையாரும். அதாவது மனிதரின் இழிவை-மட்டமான தன்மையை உணர்த்துவதாகும். அத்தகைய மட்டமான மனிதனும் உயரிய தெய்வம் ஆகலாம் என்பதையே, இந்தத் தலைப்பு அறி வுறுத்துகிறது. இத்தகைய மனிதத் தெய்வங்கட்குக் கோயில் எடுத்து வழிபடுகின்றோம்.


இது காறும் கூறியவற்றால், தெய்வங்கள் எல்லாம் மனிதர்களே என்பது புலனாகலாம். இதற்கு இன்னும் விளக்கமான சான்று வேண்டுமா? சரி, இதோ :


பெயர் பெற்ற பல திருக்கோயில்கள், பெரியார்களைப் புதைத்த, அடக்கத்தின் மேல் எழுந்தவையே! அடக்கத்