பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

. வழக்கம். சைவ சமயத்தின் தலைமைப் பெருமையைப் பரப்புவதை எனது பத்தொன்பதாவது வயதிலேயே தொடங்கிவிட்டேன். சிவன் ஒருவ்னே பிள்ளையாய்ப் பிறக்காத தெய்வம். செத்துப் பிறக்கின்ற-பிறந்து சாகின்ற தெய்வங்களுக்கெல்லாம் தலைவன் சிவனே என்று யான் அப்போது பேசுவது வழக்கம்.


எனது இருபதாவது வயதில் ஒரு திங்கள் கிழமையில் (Monday)தலை முழுகுவதற்காக யான்வீட்டில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தேன். “சனி நீராடு என்னும் ஒளவையின் அறிவுரைப்படி, எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயைச் சனிக்கிழமை தோறும் உடம்பு முழுவதும் தேய்த்துக் குளிப்பது தமிழ்நாட்டு மரபு. சனிக்கிழமைத் தலை முழுக்கு தவறி விட்டதால், அடுத்து வந்த திங்கட் கிழமையில் யான் வழக்கத்து மாறாக எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தேன். அப்போது, மடுகரை என்னும் ஊரிலிருந்து, எண்பது வயதுக்குமேல் முதிர்ந்த பெரியவர் ஒருவர். எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் என்னை நோக்கி, ஏன் தம்பி இன்றைக்கு எண்ணெய் தேய்த்துக் கொள்கிறாய்? என்று வினவினார். இன்றைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டால் என்ன தவறு? என்று யான் பதிலுக்கு வினவினேன். இன்றைக்கு என்ன கிழமை? என்று கேட்டார் அவர். “திங்கள் கிழமை என்றேன் நான். திங்கள் கிழமை யில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாமா?[1] என்று அவர் வினவினார். திங்கள் கிழமையில் தேய்த்துக்கொண்டால் என்ன? என்று கேட்டேன் நான். திங்கள் கிழமை சிவன் பிறந்த நாளாயிற்றே-சைவ சமயத்தவர்களாகிய நாம் திங்கள் கிழமையில் எண்ணெய் தேய்த்துக் கொள்ளலாமா?-கூடாதே’ என்றார்.


  1. ஆத்திசூடி-16