பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


6. கடவுள் உண்மைப் பொருளா?

அடுத்து-ஊழ்வினைப்படி உயிர்களைப் படைப்பதாகவும், அவதாரங்கள் எடுப்பதாகவும் சொல்லப்படுகின்ற கடவுள் என்னும் ஒர் உயர் பொருள் உண்டா என ஆராய வேண்டும். கடவுள் என ஒரு பொருள் இல்லை என்பது உறுதிப்படின் ஊழ்வினைக் கொள்கை, அவதாரக் கொள்கை முதலிய மூட நம்பிக்கைக் கொள்கைகள் எல்லாம் தாமே அடிபட்டுப் போகும்.


ஆத்திகமும் நாத்திகமும்

கடவுள் உண்டு என்னும் கொள்கையின் கூடவே கடவுள் இல்லை என்னும் கொள்கையும் உடன் இருந்து வருகிறது. கடவுள் உண்டு என்னும் கொள்கை ஆத்திகம்’ (Theism) என்னும் பெயராலும், கடவுள் இல்லை என்னும் கொள்கை நாத்திகம்’ (Atheism) என்னும் பெயராலும் சம்சுகிருதத்தில் வழங்கப்படுகின்றன.


“அஸ்தி என்னும் சம்சு கிருதச்சொல்லுக்கு ‘உள்ளது' . என்பது பொருளாகும்; எனவே, கடவுள் உண்மைப் பொருள்” என்னும் கொள்கை ஆஸ்திகம் (ஆத்திகம்) எனப்பட்டது. இதற்கு எதிரான கடவுள் இன்மைக் கொள்கை நாஸ்திகம் (நாத்திகம்) எனப்பட்டது. இவ்விரண்டையும் முறையே, உண்மை அல்லது உண்மைக்