பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44


கொள்கை, இன்மை அல்லது இன்மைக் கொள்கை என நாம் தமிழில் வழங்கலாம்.


ஆத்திகர், நாத்திகர் என்னும் பெயர்களைத்தமிழில் என்னென்ன பெயர்களால் வழங்கலாம் என்பதைத் திருவள்ளுவர் நமக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். உலகத்தார் உண்டு என்பதை இல்லையென்பவன் பேயாகக் கருதப்படுவான் என்று அவர் கூறியுள்ளார்.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும் (850)

'

என்பது அவரது திருக்குறள் பாடலாகும். எனவே, ஆத்திகர், நாத்திகர் என்னும் சம்சுகிருதப் பெயர்கட்கு நேராக முறையே உண்டென்பவர், இன்றென்பவர்’ என்னும் பெயர்களைத் தமிழில் வழங்கலாம். வள்ளுவனார் உண்டு என்னும் கொள்கையினரே. இக்காலத்தில் ஆத்திகர் பலராகவும் நாத்திகர் மிகச் சிலராகவும் உள்ளனர்; ஆயினும், நாத்திகர் பற்றிய குறிப்பு பல்லாண்டுகட்கு முன்பே நூல்களில் ஏறிவிட்டது.


இற்றைக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகட்ரு முற்பட்டவரான மாணிக்கவாசகர் என்னும் பெரியார், நாத்திகம் பற்றி,

(1) காத்திகம் பேசி காத்தழும்பு ஏறினர்

எனக் கூறியுள்ளார். மறைஞான சம்பந்தர் என்பவர்.

(2) காத்திகர் என்றே உளத்துள் நாடு

எனவும், சிவஞான முனிவர் என்பவர்,

(3) காத்திகச் சொற்கு ஒரு கரிபோய் இழிந்தேனை