பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55


மாக இருக்கிறார் என்பதாக, பொறி புலன்கள் உணரும் வகையில் யாராவது கொண்டு வந்து அறிவித்தார்களா? இனிமேலாவது இயலுமா? வித்தை காட்டிக் கொண் டிருக்கக் கூடாது; வெளிக் கொணர வேண்டும். நம்மை இல்லை என்று சொல்கிறார்களே என்று மானம் ரோஷம்) வந்து, இதோ இருக்கிறேன் பாருங்கள் என்று கடவுள் தாமாகவாவது மக்கள் இனத்தின் கண்ணெதிரில் வந்து காட்சி தருவாரா?


கடவுள் முன்னொரு காலத்தில் வெளி வந்து ஒருவருக்குக் காட்சி தந்தார்-பின்னர் மற்றொரு காலத்தில் வெளிவந்து மற்றொருவர்க்குக் காட்சி தந்தார்-பின்பு வேறொரு காலத்தில் வெளி வந்து வேறொருவர்க்குக் காட்சி தந்தார்-என்பதாகப் புராணங்களிலிருந்து எடுத்துக் கதையளப்பது வித்தை காட்டுவது போன்றது தான்! அப்போது வெளிவந்தது உண்மையாயின் இப்போதும் வெளிவரட்டுமே! இனி எப்போது வெளிவருவார்? உலகில் ஒவ்வொரு துறையும் அறிவியல் அடிப்படையில் ஆண்டுக்கு ஆண்டு-திங்களுக்குத் திங்கள்நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருப்பதை-வளர்க்கப்பட்டு வருவதை நாம் கண்டு வருகிறோம். எடுத்துக்காட்டாக, உழவு, பல்வகைப் பொருள்களின் உற்பத்தி, கல்வி, இலக்கியம், மருத்துவம், மின்சாரம், அணு ஆராய்ச்சி முதலிய துறைகள் நாளுக்கு நாள் மின்னல் வேகத்தில் வளர்ந்து வருவதை-வளர்க்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். அங்ஙனம் இருக்க, கடவுள் துறை மட்டும் ஏன் மேன்மேலும் வளர்ச்சி பெறவில்லை.


இங்கே, மதங்களின் வளர்ச்சியை-மதவாதிகளின் வளர்ச்சியை - சமயச் சடங்குகளின் வளர்ச்சியைகோயில் குளங்களின் வளர்ச்சியை-தேர்த் திருவிழாக்களின் வளர்ச்சியை - பூசனை வழிபாடுகளின் வளர்ச்சியை