பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64


அளித்த்தும் இல்லை-குற்றமில்லாதவர்களை மீட்டதும் இல்லை-கொள்ளை நோயைத் தடுத்ததும் இல்லை - அடிமையை விடுவித்ததும் இல்லை. எனவே, மாந்தர். இயற்கைக்கு மேல் எந்த ஒர் ஆற்றலும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்-தம் முழுக் கவனத்தையும் முழு முயற்சியையும் இயற்கையின்பாலும் உலகத்தின்பாலும் திசை திருப்ப வேண்டும். மக்கள் தம்மைத் தாமே தாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்-மக்களைப் பற்றிக் கவலைப்படவோ கவனிக்கவோ இயற்கைக்கு மேல் வேறு எந்த ஓர் ஆற்றலும் இல்லை - என்னும் பேருண்மை உலக மாந்தர் அனைவருக்கும் உணர்த்தப்பட வேண்டும்.’ -


இவை இங்கர் சால் அவர்களின் கருத்துகள் ஆகும். இவ்வாறு இன்னும் அறிஞர்கள் பலர் அறிவுரைகள் வழங்கியுள்ளனர்.

இதனால்தான், கடவுள் பற்றியும் வீடுபேறு பற்றியும் புத்தர் பெருமான் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை போலும் கடவுளே உயிர்-உயிரே கடவுள் என்னும் அத்வைதக் கொள்கையும் ஒரு வகையில் சரிதான் போலும்! கடவுள் உயிர்களையும் உலகங்களையும் படைக்கவில்லை; இம்முப்பொருளுமே ஒரே சமயத்தில் தாமே தோன்றியவை என்று குறிப்புக்காட்டும் சைவ -சித்தாந்த சமயத்தின் அடிப்படைக் கொள்கையில் ஓரளவேனும் உண்மை இருக்கலாம்.

ஆனால், இளமையிலிருந்து சைவ சித்தாந்தியாகத் தயாரிக்கப் பெற்ற யானே-சைவ சித்தாந்தச் சமயமே மற்ற எல்லாச் சமயங்களினும் சிறந்ததாகும் என முன்பு பல்லாண்டுகளாக வாதிட்டுவந்த யானே, இப்போது