பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65


(1988) சைவ சித்தாந்தச் சமயக் கொள்கை முழுவ: தையும் அப்படியே ஏற்றுக் கொள்வதற்கில்லை:

உள்ளத்துள் உள்ளமை

கடவுள் உயிர்களின் உள்ளத்துள் உள்ளார்;வேறெங்கும் இல்லை-என்பதாகப் பெரியோர்கள் சிலர் கூறியுள்ளனர். சிலர் கூற்றுகளைக் காண்போம்:

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கோவில் வழிபாடு என்னும் தலைப்பில் பின்வரும் பாடல்களைத் தந்துள்ளார்:

1. கோவில் முழுதும் கண்டேன்-உயர்
                      கோபுரம் ஏறிக் கண்டேன்
               தேவாதி தேவனை யான்-தோழி
                     தேடியும் கண்டிலனே.


2. தெப்பக் குளம் கண்டேன்- சுற்றித்
                   தேரோடும் வீதி கண்டேன்
             எய்ப்பில் வைப்பாம் அவனைத்-தோழி
                    ஏழையான் கண்டிலனே.


3. சிற்பச் சிலை கண்டேன்- நல்ல
                    சித்திர வேலை கண்டேன்
             அற்புத மூர்த்தியினைத்-தோழி
                    அங்கெங்கும் கண்டிலனே.


4. பொன்னும் மணியும் கண்டேன்-வாசம்
                     பொங்கு பூ மாலை கண்டேன்
              என்னப்பன் எம்பிரானைத்-தோழி
                      இன்னும் யான் கண்டிலனே.