பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


ஈண்டு மிகவும் நுட்பமாகச் சிந்திக்கவேண்டியுள்ளது. உயிர் என்னும் ஒன்று வெளியேறி விட்டதனால் உடல் இயங்காமல் பிணம் எனப்பட்டதா? அல்லது, உடல் இயங்க ஒத்துழைக்காமையால், உயிர் என்னும் ஒன்று வெளியேறிவிட்டதா? இதற்குச் சரியான விடை வேண்டும். எனவே இது சிந்தனைக்கு உரியதாகும். இதற்குவிட்ையும் கூறவியலும், உயிர் போய்விட்டதனால் உடல் இயங்கவில்லை-பிணமாய் விட்டது’ என்று கூறுவது பொருந்தாது. உடல் இயங்க முடியாமற் போனதால்தான், உயிர் என்னும் ஒன்று வெளியேறி விட்டதாகக் கருதுகின்றனர்-என்று கூறுவதே சாலப் பொருந்தும். இதற்கு இன்னும் விளக்கம் வேண்டுமெனில். இதோ-


உடல்-உடலுறுப்புகள் சரியான நிலையில் இருப்பவர் நீண்ட காலம் வாழ்கிறார்; உடல்-உடல் உறுப்புகள் பிணியினாலோ வேறு காரணங்களாலோ கெட்டுப் போனவர் செத்துப் போகிறார்; நூறு ஆண்டுகளும் அதற்கு மேலும் வாழ்பவர்கள், உடல் உறுப்புகள் தேய்ந்து போவதால்-மிகப் பழமையாகி ஆற்றல் இழந்து போவதால் உடல் இயங்க முடியாமல் செத்துப் போகிறார்கள்; இதிலிருந்து தெரிவதாவதுஉடல் இயக்கத்தைக் கொண்டு உயிரே தவிர, உயிர் இயக்கத்தைக் கொண்டு உடல் இல்லை என்பதாகும். கட்டான இளமையுடனும் நல்ல தூய உடல் நிலையுடனும் வாழும் இளைஞர் ஒருவர், தூக்கில் இடப்பட்டாலோ - கழுத்து வெட்டுண்ணப் பட்டாலோ, எதிர்பாராத இடையூற்றில் (விபத்தில்) சிக்கிக் கொண்டாலோ, உடனே இறந்து போகிறார். இந்நிலைகளில் அவர் உயிர் போனதால் இறக்கவில்லை-அஃதாவது; மாறாக, உடலுக்கு