பக்கம்:கடவுள் வழிபாட்டு வரலாறு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82


எலும்புகள் நரம்பு என்னும் கயிற்றால் பின்னப் பட்டிருப்பதாகத் திருத்தக்க தேவர் தமது சீவக. சிந்தாமணி என்னும் நூலில் கூறியுள்ள பாடல் பகுதியும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது:

என்பினை நரம்பிற் பின்னி
              உதிரம் தோய்த்து இறைச்சி மெத்திப்
         புன்புறத் தோலைப் போர்த்து
             மயிர்புறம் பொலிய வேய்ந்திட்டு
         ஒன்பது வாயில் ஆக்கி
            ஊன்பயில் குரம்பை செய்தான்
        மன்பெருங் தச்சன் நல்லன்
            மயங்கினார் மருள என்றான்’

என்பது பாடல். மற்றும், செவ்வைச் சூடுவார் இயற்றிய பாகவதம் என்னும் நூலில் உள்ள

“இடையுறும் என்பினை நரம்பின் ஆர்த்திடாப்
புடையுறும் இறைச்சியால் பொதிந்து போக்கற
மிடைதரு தோலினான் வேயப் பட்டதோர்
உடலினை யானென உரைக்கல் ஒண்ணுமோ”


என்னும் பாடலும் (5, 2 : 31) உடலிடை நரம்புக்கு. உள்ள தொடர்பை அறிவிப்பது காணலாம். இக்கால அறிவியல் தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே தமிழர்கள் நரம்பின் இயக்கத்தை அறிந்திருந்தனர் என்பதற்காக இவை ஈண்டு எடுத்துக்காட்டப்பட்டன. இனி அடுத்து முடிவுக்கு வருவோம் :


  1. சீவக சிந்தாமணி- கனக மாலையார் இலம்பகம்-21.