பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/104

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

brain-wav

102

breakpoint


brain-wave interface: மூளை - அலை பரிமாற்றம் : மனிதனின் எண்ணங்களை அறிந்து அதற்கேற்ப கணினி செயலாற்றும் திறன் உடைய மென் பொருள் மற்றும் வன்பொருள்.

branch : பிரிதல் : 1. சில நிபந்தனைகளின் அடிப்படையில் கட்டுப்பாட்டின் ஒட்டம் ஒன்று அல்லது பல பாதைகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்தல். 2. ஒரு ஆணைத் தொடர் வரிசையில் இருந்து மற்றொரு ஆணைத் தொடர் வரிசைக்குக் கட்டுப்பாட்டினை மாற்றக் கூடிய ஆணை.

branching : பிரித்தல்.

branching Statement : கிளைத்தல்; கிளைபிரி கட்டளை.

branch Instruction : கிளைபிரிப்பு ஆணை : இரண்டில் ஒரு ஆணைத் தொடர் பாதையைத் தேர்ந்தெடுப்பதற்குக் கணினிக்கு உதவும் ஆணை. ஆணைத் தொடரை இயக்கும்போது கணினியால் முடிவு செய்யப்படும் சூழ்நிலைக்கேற்ப பிரிந்து போதல் செயல்படுத்தப்படும்.

branchpoint : பிரியும் இடம் : ஒரு ஆணைத் தொடரில் பிரிந்து போதலைத் தேர்ந்தெடுக்க வேண்டிய இடம்.

breadth-first search : அகல - முதல் தேடல் : மரவடிவ தகவல் அமைப்பை அலசும் ஒரு முறை. இம்முறையில் ஒரு நிலையில் உள்ள எல்லா முனைகளையும் தேடிய பின் அடுத்த நிலையில் தேடுவது. இதன்மூலம் இரண்டு புள்ளிகளுக்கிடையிலான சுருக்கமான பாதையை முதலில் கண்டு பிடிக்க முடியும்.

breadboard : சோதனைப் பலகை; பிரெட்போர்ட் : ஒரு செயல்முறை சாதனம் அல்லது ஒரு அமைப்பின் சோதனை முறையிலான அல்லது தற்காலிகமான மாதிரி அமைப்பு.

Break : நிறுத்து : ஒரு ஆணைத்தொடர் செயல்படுவதைத் தடுப்பதற்கான ஆணை. Control Break என்பதற்கு ஒப்புமை உடையதல்ல.

break code : நிறுத்தக் குறியீடு : விசையினை முதல் முதலில் அழுத்தும் போது வெளியிடப்படும் ஸ்கேன் குறியீடு.

break detect : நிறுத்தம் கண்டுபிடிப்பு : நீள் வரிசை அளவை 0-க் களை கண்டுபிடிக்கும், தகவல் தொடர் ஏற்பியின் திறன்.

break key : நிறுத்தும் விசை : கணினி செய்து கொண்டிருக்கும் வேலையை நிறுத்துவதற்கான விசை. சில கணினிகளில் காணப்படும்.

breakpoint : நிறுத்துமிடம் : ஒரு கட்டுப்பாட்டு ஆணை மூலமாகவோ அல்லது கையால் இயக்குவது மூலமாகவோ ஒரு ஆணைத் தொடரை நிறுத்தக்கூடிய ஒரு இடம்.