பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/117

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

Canned rou

115

capacity


canned routine : அடைக்கப்பட்ட வாலாய செயல்முறை : ஒரு குறிப்பிட்ட கணினியில் பயன்படுத்துவதற்காக முன்னதாக எழுதப்பட்ட ஆணைத் தொடர். ஒரு குறிப்பிட்ட செயலாக்கப் பணியைச் செய்யும் துணை வாலாய செயல் முறை (சப்ரொட்டீன்).

canned software : அடைக்கப்பட்ட மென்பொருள் : உடனே பயன்படுத்தத் தயாரான நிலையில் பயன்படுத்துவோருக்கோ அல்லது வேறொரு விற்பனையாளருக்கோ கணினி உற்பத்தியாளர்கள் தயாரித்த ஆணைத் தொடர்கள். பல வணிகர்கள் மற்றும் தனி நபர்கள் பயன்படுத்தும் அளவுக்குப் பொதுவானது. Custom Software - க்கு மாறானது.

canon engine : கேனன் எந்திரம் : கேனன் ஒளிப்பட நகலெடுக்கும் கருவியில் பயன்படும் உள் எந்திர அமைப்பு. பல லேசர் அச்சுப் பொறிகளில் பயன்படுத்தப்படுகிறது.

canonical synthesis: விதிமுறை பகுப்பாய்வு : மீண்டும் வரும் விவரப் பொருள்கள் இல்லாமல் ஒரு தகவல் தள மாதிரியை வடிவமைக்கும் செயல் முறை. விதிமுறை முன்மாதிரி அல்லது திட்டமானது எத்தகைய வன்பொருள் அல்லது மென்பொருளாக இருந்தாலும் தகவல் செயலாக்கம் செய்யும்.

CAP: கேப் : Computer-Aided Publishing என்பதன் குறும்பெயர்.

capability list : திறன் பட்டியல் : ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்படும் விவரக் குறிப்புப் பட்டியலை வரிசைப்படுத்துதல்.

capacitance : தாங்கும் திறன் : மின் சக்தியைச் சேமிக்கும் திறனின் அளவு. Farad என்பதை அடிப்படை அளவு கோலாகக் கொண்டது.

capacitor: தாங்கி; மின்னுறைக் கலன்கள் : நிலையான மின்சக்தியை சேமிக்கும் மின் சாதனம். முறையாகக் கிளப்பிவிட்டால் மின்சக்தியை

மின்னுறைக் கலன்கள் (Capacitor)

வெளியிடும். கணினி இருப்பகத்தில் துண்மிகளை எழுதும் முறையும், படிக்கும் முறையும் இதுதான்.

capacitor storage: தாங்கி சேமிப்பகம்; மின்னுறைகலன் சேமிப்பகம் : ஒரு பொருளின் தாங்கும் பொருட்களைப் பயன்படுத்தி தகவல்களை சேமிக்கும் ஒரு சேமிப்புச்சாதனம்.

capacity : திறன் : கொள்திறன் ஒரு சேமிப்பகச் சாதனத்தில் எத்தனை வகையான தகவல்களைச் சேமித்து வைக்க முடியும் என்பது கணினிச்