பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/118

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

capacity man

116

card


சொற்கள், எட்டியல் எழுத்துகள் போன்ற பல வகைகளில் கூறப்படுகிறது.

capacity management : திறன் நிர்வாகம் : தகவல் செயலாக்கப் பணிகளின் அளவு, வன்பொருள் - மென் பொருள், பயன்பாடு மற்றும் பிற கணினி அமைப்புத் தேவைகளைக் கட்டுப்படுத்தி, வருவதுரைக்கும் திட்டமிடல் மற்றும் கட்டுப்பாட்டு முறைகளைப் பயன்படுத்தல்.

cap height : தலைப்பெழுத்து உயரம் : கீழ் வரியிலிருந்து தலைப்பெழுத்தின் உயரம்.

caps : தலைப்பெழுத்துகள்; தலைப்பெழுத்துகள் அல்லது மேல் எழுத்துகள் :All Caps என்றால் எல்லா எழுத்துகளும் தலைப்பெழுத்துகளாக வேண்டும். initial caps என்றால் ஒவ்வொரு முக்கிய சொல்லிலும் முதல் எழுத்து தலைப்பெழுத்தாக்கப்பட வேண்டும்

capstan : கேப்ஸ்டன்; இழுவிசைப் பொறி : ஒரு நிலையான வேகத்தில் பதிவு செய்யும் முனையை, நாடா

இழுவிசைப் பொறி (Capstan)

வின் குறுக்காக இழுக்கும் காந்த நாடா இயக்கியின் சுழலும் சாதனம்.

caps lock key: தலைப்பெழுத்து பூட்டு விசை : கணினி விசைப் பலகையில் உள்ள ஒரு விசை எழுத்துகளில் கொட்டை எழுத்தை மட்டும் அணுக அனுமதிக்கும் விசை. "மாற்றி விசை" யுடன் இதை ஒப்பிடுக. இது எழுத்துகள் மட்டுமல்லாது இரண்டாவது பணியையும் அனுமதிக்கும் தலைப்பெழுத்து பூட்டப்பட்டபின் 'மாற்று' (Shift) விசையை அழுத்தினால் சில கணினிகளில் மீண்டும் பழைய நிலையே வந்துவிடும்.

capture: பதிவு செய் : கணினியிலோ அல்லது ஏதாவது ஒரு வடிவிலோ தகவல்களைப் பதிவு செய்தல்.

CAR (Computer-Assisted Retrieval): கார் : Computer Assisted Retrieval என்பதன் குறும்பெயர். காகிதம் மற்றும் நுண் வடிவத்தில் சேமிக்கப்படும் பாகங்கள், ஆவணங்கள் அல்லது பதிவுகளைத் தேடிக் கண்டுபிடிக்க கணினி பயன்படுத்தும் ஏற்பாடு. கணினியானது அந்தப் பொருள் எங்கிருக்கிறது என்பதைக் கண்டுபிடித்த பின், கணினியைப் பயன்படுத்துபவர் தனது கைகளால் அதை எடுத்துக் கொள்வார். LISPஇல் பயன்படுவது.

carbon ribbon : படிவுத்தாள் பட்டை : நன்றாகத் தெரியக்கூடிய துல்லியமான எழுத்துகளை உருவாக்கித் தரும், அச்சுப் பொறிகளில் பயன்படுத்தப்படும், படிவுத்தாள் இழை பட்டை.

Card : அட்டை : (1) அச்சிடப்பட்ட மின்சுற்று அட்டை. (2) 18.7 செ.மீ -க்கு 8.3 செ.மீ அளவுகளில் செங்குத்தான வரிசையில் துளைகளைப் பதிவு செய்வதன் மூலம் தகவல்களைக் குறிப்பிடும் ஒரு சேமிப்பு ஊடகம்.

card code : அட்டைக் குறியீடு : ஒரு துளையிடப்பட்ட அட்டையில்