பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/119

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

Card cag

117

card pun


எழுத்துகளைக் குறிப்பிடும் துளையிட்ட ஒட்டைகளின் கூட்டமைப்புகள்.

card cage : அட்டைப் பெட்டி : அச்சிடப்பட்ட மின்சுற்று அட்டைகளைப் பொருத்துகின்ற கணினியின் உள்ளே இருக்கும் ஒரு பெட்டி.

அட்டை (card) துளையிட்ட அட்டை (மேலே), அச்சிட்ட மின்சுற்று அட்டை (கீழே)

card column : அட்டைத் பத்தி : ஒரு துளையிட்ட அட்டையில் துளையிடும் இடங்களின் செங்குத்தான வரிகளில் ஒன்று.

card deck : அட்டைத் தொகுதி : துளையிட்ட அட்டைகளின் ஒரு தொகுதி.

card face : அட்டை முகம் : ஒரு துளையிட்ட அட்டையின் அச்சிடப்பட்ட பக்கம்.

card feed : அட்டை இயக்கி : துளையிட்ட அட்டைகளை எந்திரத்தில் ஒவ்வொன்றாக நகர்த்தும் சாதனம்.

card field : அட்டைப் புலம் : ஒரு தகவல் அலகுக்கு அளிக்கப்படும் தொடர்ச்சியான துளையிட்ட அட்டைகள்; குறிப்பிட்ட எண்.

card frame : அட்டைச் சட்டம் : ஒரு கணினி அமைப்பின் மின் சுற்று அட்டைகளை ஒரு இடத்தில் வைத்துப் பிடிக்கும் ஒரு பகுதி.

card hopper : அட்டை தள்ளும் சாதனம் : துளையிட்ட அட்டைகளை வைத்துக் கொண்டு அட்டையைக் கையாளும் கருவியின் நகர்த்தும் இயக்கத்திற்குக் கொடுக்கின்ற சாதனம்.

card image : அட்டை உருவம் : ஒரு அட்டையில் துளையிடப்பட்ட, சேமிக்கப்பட்டுள்ள பொருள்.

cardinal number : கார்டினல் எண் : ஒரு தொகுதியில் எத்தனை வகையறாக்கள் உள்ளன என்பதைக் குறிப்பிடும் எண். சான்றாக, 21" என்ற எண்ணில் 10 எழுத்துகள் என்றால் 21 கார்டினல் 10ஆர்டினல் ஆகும்.

cardinaity : கார்டினல் தன்மை : ஒரு வகுப்பானது எத்தனை முறை வரலாம், வகுப்பு உறவுகளை எத்தனை தடவை பயன்படுத்தலாம் என்ற பொருள் சார்ந்த ஆணைத் தொடரமைப்பில் பயன்படுவது.

card punch : அட்டை துளையிடும் கருவி : கணினியின் நினைவகத்தில் இருந்து தகவலைப் பெற்று, அதை அட்டைகளில் துளையிட்டுத் தரும் வெளியீட்டுச் சாதனம்.