பக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/606

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

second sou

604

securi


 முறையைச் சேர்ந்த கணினிகள். இதில் வெற்றிடக் குழாய்க்குப் பதில் மின்மப் பெருக்கி (டிரான்சிஸ்டர்) பயன்படுத்தப்பட்டது. இவ்வகைக் கணினிகள் 1959 முதல் 1964 வரை ஆதிக்கம் பெற்றிருந்தன. பிறகு இவற்றுக்குப் பதில் ஒருங்கிணைந்த மின்சுற்று நெறியைப் பயன்படுத்தும் கணினிகள் பயனுக்கு வந்தன.

second source : துணை ஆதாரம், இரண்டாம் ஆதாரம், இரண்டாம் மூலம் : மற்றொரு உற்பத்தியாளரின் உற்பத்திப் பொருளுடன் பரிமாற்றம் செய்து கொள்ளக்கூடிய ஒரு பொருளைத் தயாரிக்கும் உற்பத்தியாளர்.

secret codes : இரகசியக் குறியீடுகள் :

sector: வட்டக்கூறு, பிரிவு, பகுதி : இருபுறமும் ஆன எல்லையுடைய வட்டக்கூறு. ஒரு வட்டு மேற்பரப்பு இத்தகைய வட்டக்கூறுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வட்டப் பிரிவு (Sector)

sector interleave: வட்டக்கூறு இடை இணைப்பு : ஒரு நிலைவட்டு வட்டக்கூறு இலக்கமிடுதல். ஒன்றுக்கு ஒன்று (1:1) என்ற இடைஇணைப்பு வரிசைமுறையில் அமைந்தது: 0,1,2, 3 முதலியன. இரண்டுக்கு ஒன்று (2:1) என்ற இடை இணைப்பு அடுத்த வட்டக்கூறு. ஒவ்வொன்றும் இரண்டாவதாக இருக்கும் வகையில் வட்டக்கூறுகளை மாறுபட அமைக் கிறது. 0,4,1,5,2,6,3,7.ஒன்றுக்கு ஒன்று (1:1) என்ற இடை இணைப்பில், வட்டக்கூறிலுள்ள தகவல் படிக்கப்பட்ட பிறகு, இரண்டாவது வட்டக்கூறினைப் படிக்கும் அளவுக்கு வட்டுக்கட்டுப்படுத்தி விரைவாக இயங்க வேண்டும். இல்லையெனில், இரண்டாம் வட்டக்கூறின் தொடக்கம், எழுது/படிப்பு முனையைக் கடந்து சென்று விடும்; மீண்டும் அது முனையின் கீழ் வருவதற்கு மறுபடியும் ஒரு சுற்று சுற்றிவர வேண்டும். அது போதிய வேகத்தில் இயங்காவிட்டால், ஒரு 2:1 அல்லது 3:1 இடை இணைப்பு, ஒரே சுழற்சியில் வட்டக்கூறுகள் அனைத்தையும் படிப்பதற்கு அதற்குக் கால அவகாசம் கொடுக்கிறது.

sector method : வட்டக்கூறுமுறை, பிரிவுமுறை: ஒரு வட்டின் மேற்பரப்பினைக் குவிய வட்டக்கூறுகளாகப் பகுக்கக் கூடிய, நெகிழ் வட்டுகளுடன் பயன்படுத்தப்படும் வட்டு முகவரியிடும் முறை.

secure kernel : காப்புக் கருமூலம், காப்புக் கரு : ஒரு பொறியமைவுச் செயல்முறையின் பாதுகாக்கப்பட்ட கூறு.

security : காப்புநிலை, பாதுகாப்பு, காப்புக் கட்டுப்பாடுகள், காப்பு : சேதமடைதல், திருட்டு அல்லது திரிபடைதலைத் தடுக்கும் வெற்றிகரமான முயற்சிகளின் விளைவாக, வன்பொருள், மென்பொருள்